பொல்கஹவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று தடம் புரண்டு, அதன் ஒரு பெட்டி தண்டவாளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வனவாஸல மற்றும் ஹுணுபிட்டிய புகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று (16) காலை இத்துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) எஃப்.யு. வூட்லர் (F.U. Wootler) இதுகுறித்துத் தெரிவிக்கையில், காயமடைந்த பயணிகள் சம்பவ இடத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பலத்த காயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான இப்புகையிரதம் இன்று அதிகாலை 3:25 மணியளவில் பொல்கஹவெலவிலிருந்து புறப்பட்டு, களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ‘செய்தியாளர் தெரிவித்துள்ளார்.