ஹம்பேகமுவ – உடவலவ வனப்பகுதியில், பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா போதைப்பொருள் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால், நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் பேதே அவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, 44 கிலோ கிராம் 600 கிராம் கஞ்சா அடங்கிய 03 உரப்பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஹம்பேகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.