ஆட்பதிவு திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் ஒருநாள் சேவை கடமைகள் இன்று திங்கட்கிழமை (03) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒருநாள் சேவை ஊடாக தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய சேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.