வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில் உயர்மட்டக் கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்தைச் சுற்றுலாத்துறையில் துரித கதியில் முன்னேற்றும் நோக்கில், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாகாண உயர் அதிகாரிகளுடனான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் தற்போதைய கள யதார்த்தத்தில் உள்ள சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இச்சந்திப்பில் மிகவும் ஆழமாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய ஆளுநர்  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மேம்பாட்டில் அதீத ஆர்வத்துடன் செயலாற்றி வருகின்றது. அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகச் செயற்படுவது மிகுந்த கவலைக்குரியது. உடனடியாக இவ்வாறான அதிகாரத்துவ முட்டுக்கட்டைகள் நீக்கப்பட்டு, அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட முன்வர வேண்டும், என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன், யாழ்ப்பாணத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் பங்கேற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் வடக்கு மாகாணத்தை இலங்கையின் முதன்மைச் சுற்றுலா மையமாக மாற்றுவோம் என உறுதியளித்திருந்தேன். அதனைச் சாத்தியப்படுத்த வேண்டுமானால், இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தனது கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரங்களை மாகாணப் பணியகத்துக்குப் பரவலாக்க வேண்டும். குறிப்பாக, சிறிய அளவிலான சுற்றுலா விடுதிகளைப் பதிவு செய்யும் அதிகாரத்தையாவது மாகாணத்துக்கு வழங்குவது பணிகளைத் துரிதப்படுத்தப் பெரிதும் உதவும்’ எனத் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் மற்றும் எஸ்.சிறீபவானந்தராஜா ஆகியோர் சுற்றுலாவிகளின் தற்போதைய மனநிலை மற்றும் முதலீட்டாளர்களின் ஏமாற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டனர்.
‘சுற்றுலாவிகள் வெறும் கடல் நீராடலுக்காக மட்டும் இங்கு வருவதில்லை. அவர்கள் சாகச விளையாட்டுகள் மற்றும் பல்வேறு புதிய பொழுதுபோக்கு அம்சங்களையே எதிர்பார்க்கின்றார்கள். மாலைதீவு போன்ற நாடுகளில் சிறு தீவுகளிலும் கடலின் நடுவிலும் குடில்களை அமைத்துச் சுற்றுலாவிகளை ஈர்க்கின்றார்கள். வடக்கிலும் அத்தகைய அற்புதமான சூழலும் தீவுகளும் உள்ளன. ஆனால், சுற்றுலா மையங்களை அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் ஏற்படும் நீண்டகாலத் தாமதங்கள் காரணமாக, ஆர்வத்துடன் வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இந்தச் சிவப்பு நாடா நடைமுறைகள் உடனடியாக மாற்றப்பட வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகளால் மாகாணத்தின் சுற்றுலா வலையமைப்புத் திட்டங்கள் குறித்த விசேட முன்னளிக்கை செய்யப்பட்டது.
திட்டமிட்ட மற்றும் நிலையான முறையில் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இலங்கை சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான கருப்பொருள் உல்லாச விடுதிகளை உருவாக்கும் திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை ‘கருப்பொருள் சுற்றுலாத் தளங்களாக’ அபிவிருத்தி செய்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டிருந்தாலும், அதன் முன்னேற்றம் திருப்திகரமாக இல்லை என்பது அதிகார சபையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.

சுற்றுலா சார்ந்த முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்கவும் ‘ஒரே நிறுத்தச் சேவை’ பொறிமுறை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இவ்வாறான கருப்பொருள் உல்லாச விடுதிகள் திட்டங்கள் செயற்படுத்தப்படும்போது, ஏனைய அரச திணைக்களங்களின் அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் இலகுவாக்கப்படுவதுடன், அப்பகுதிகளில் சுற்றுலாவிகளின் வருகையும் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, மன்னார் மற்றும் நெடுந்தீவில் இந்தத் திட்டத்துக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அதிகார சபையினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கான முழுமையான ஆதரவையும் நிர்வாக ரீதியான உதவிகளையும் வழங்க முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது உறுதியளித்தனர்.

.

b

குற்றக் கும்பல்களுக்குக் கைக்குண்டு கிடைத்தது எப்படி?

September 13, 2026

தெஹிவளை வீடொன்று மீது அண்மையில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

bom

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6 குண்டுத் தாக்குதல்கள்

September 13, 2026

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ்

pa

காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை

September 13, 2026

இலங்கைச் சுங்கத் திணைக்களத்தினால் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை” குறித்து

thal

தலைமன்னார் கடலில் மணல்மேட்டில் வழிதவறியவரை மீட்ட கடற்படையினர்

September 13, 2026

இலங்கை கடற்படையினர் தலைமன்னாருக்கு அப்பால் உள்ள கடலில் மணல்மேட்டில் வழிதவறிய நபர் ஒருவரை மீட்டதுடன், அந்த நபருக்கு தேவையான மனிதநேய

dailythanthi_2026-09-12_o3yec9f7_Chennai-mayor

“என் தலைவரைச் சீண்டினால் யாராக இருந்தாலும் விடமாட்டோம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மேயர் பிரியா ஆவேச எச்சரிக்கை

September 12, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மிசா சட்டம் மற்றும் மு.க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியதைக் கண்டித்து, சென்னையில் நடைபெற்ற திமுக

1693_12_3_2021_19_53_17_1_MALLAI_SATHYA_MDMK_MADURANTAGAM

இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு: திராவிட வெற்றிக் கழகத் தலைவர் மல்லை சத்யா அறிவிப்பு!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாகத் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா

13

“ப்யூஸ் போன தவெக அரசு”: மின்வெட்டு மற்றும் ஆவின் பால் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நிலவும் தொடர் மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாடு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், மக்களைத்

vanniyarasu (1)

“சமூகநீதி குறித்துத் திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதி இல்லை” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

September 12, 2026

சென்னை: சமூகநீதி விவகாரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்குப் பாடம் எடுக்க எவருக்கும் தகுதி இல்லை எனச்

1200-675-27618532-thumbnail-16x9-kovai-bus

கோவையில் அதிர்ச்சி: அரசுப் பேருந்தின் தானியங்கி கதவில் சிக்கிய மூதாட்டி – ரத்தம் வழிந்ததால் பயணிகள் கொந்தளிப்பு!

September 12, 2026

கோயம்புத்தூர்: கோவையில் பயணிகள் முழுமையாக ஏறுவதற்குள் அரசுப் பேருந்தின் தானியங்கி கதவு திடீரென மூடப்பட்டதில், மூதாட்டி ஒருவரின் முகம் கதவில்

1200-675-26640765-thumbnail-16x9-shanmugam (1)

இடைத்தேர்தலில் சிபிஎம் யாருக்கு ஆதரவு? நாளை திருச்சியில் முடிவு – பெ.சண்முகம்!

September 12, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து நாளை திருச்சியில்

27617897_a

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: தமிழில் குடமுழுக்கு நடத்தக் கோரிப் போராட்டம் – 50-க்கும் மேற்பட்டோர் கைது!

September 12, 2026

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கை நீதிமன்ற உத்தரவின்படி தமிழிலும் சமமாக நடத்த வலியுறுத்தி, தடையை மீறிப் போராட்டத்தில்

ctr-2025-12-22-14-41-49

தமிழகத்தில் திடீர் மின்வெட்டுக்கு என்ன காரணம்? – மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

September 12, 2026

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏற்பட்டு வரும் தொடர் மின்தடைக்கான காரணங்களை விளக்கி மின்துறை