வடக்குக்கு வருகை தந்த இலங்கைக்கான முதலாவது கியூபெக் தூதுவர்!

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபா தேசத்தின் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும் கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் மேன்மைதங்கிய திருமதி பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு 14ம் திகதி அன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர், வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய வாசலைத் திறந்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும் கியூபா தொடர்பில் தாம் பல விடயங்களை அறிந்துள்ளதாகக் குறிப்பிட்டதுடன், முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

_127273436_mediaitem127273433.jpg

“அ.தி.மு.க-வை எப்படி விழுங்கலாம் என முழு நேரத்தை செலவிடுகிறது த.வெ.க!” – கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

October 16, 2026

சென்னை: அதிமுகவின் 55ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்

dailythanthi_2026-10-16_idpao160_STate-07

“கோவையில் பெரியார் அறிவுலக மையத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்!”

October 16, 2026

கோயம்புத்தூர்: கோவையில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பெரியார்

Shiranthi-Rajapaksa 1

சிராந்திக்கு பிணை

October 16, 2026

சிரிலிய சவிய வங்கி கணக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு கொழும்பு நீதவான்

6

“மின்சாரம் வாங்குவதில் முறைகேடு; முதலமைச்சருக்கு எத்தனை கோடி சென்றுள்ளது?” – ஆர்.எஸ்.பாரதி கேள்வி!

October 16, 2026

சென்னை: ஒரு யூனிட் 20 ரூபாய்க்கு வாங்கிய மின்சாரத்தை தற்போது 35 ரூபாய்க்கு வாங்குவதில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எத்தனை கோடி

5

“2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலில் முதல் 10 நாடுகளுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும்” – ஆதவ் அர்ஜூனா!

October 16, 2026

சென்னை: இரண்டாயிரத்து முப்பத்து ஆறாம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதல் பத்து நாடுகளுக்குள் இந்தியா கட்டாயம்

4

“தமிழக அரசியலில் புயலை கிளப்பிய ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் – திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு!”

October 16, 2026

சென்னை: அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியாவில் உள்ள ஒரு பிரபல பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பை

3 - Copy (2)

“செமிகண்டெக்டர் உற்பத்தி: தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!”

October 16, 2026

சென்னை: தமிழ்நாட்டில் குறைக்கடத்தி (Semiconductor) முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டத்தை, மாநில முதலமைச்சர் ஜோசப்

2

“மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்!” – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

October 16, 2026

சென்னை: முந்தைய திமுக அரசால் கட்டமைக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் கோவையில் இன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படுவதை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர்

97959573

“தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும்” – உணவுத்துறை அறிவிப்பு!

October 16, 2026

சென்னை: தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என்று உணவுத்துறை அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி

nmam

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

October 16, 2026

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள குழந்தை நலப் பிரிவு கட்டிடத்தொகுதி மற்றும்

namal raja

ஜனாதிபதிக்கு நாமல் கடிதம்

October 16, 2026

நாட்டில் வர்த்தக சமூகம் மற்றும் சிறிய,நடுத்தர அளவிலான நிறுவனங்கள் வங்கி அமைப்பிலிருந்து நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு

peru

பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கவனம்

October 16, 2026

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் பெருந்தோட்ட மற்றும்