வடக்கின் அபிவிருத்தி சார்ந்த கோரிக்கைகளை அரசாங்கம் சாதகமாகவே பரிசீலிக்கிறது

வடக்கின் அபிவிருத்தி சார்ந்து தம்மால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் மிகவும் சாதகமாகவே பரிசீலித்து வருகின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி, விளையாட்டுத் துறைக்குத் தேவையான வளங்களைப் பெற்று, எமது வீரர்கள் சர்வதேச அரங்கில் மிளிர வேண்டும் என வும் அவர் கூறியுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் விழா நேற்று (23.11.2025) யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரே வட மாகாணத்துக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, இந்த மாவட்டத்துக்கு ஒரு உள்ளக விளையாட்டு அரங்கு அமைய வேண்டும் எனப் பெரிதும் விரும்பினேன்.

அதற்காகப் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், அக்காலப்பகுதியில் அது கைகூடியிருக்கவில்லை. ஆனால், எனது அந்த நீண்டகாலக் கனவை இந்த அரசாங்கம் இன்று நிறைவேற்றியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகையில், யாழ். மாவட்டத்துக்கான இவ்வருட நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காகவே அதிகளவாக 170 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்று அடிக்கல் நடுகை செய்யப்படும் இந்த உள்ளக விளையாட்டு அரங்கின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விளையாட்டு வீரர்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படும் என உறுதியளித்தார்.

vija

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது

December 6, 2025

உலகின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கையை மிகவும் இழிவாக கருதுவதாகவே தென்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச

ca

வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பெய்த கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் கந்தப்பளை பிரதேசத்தில் உள்ள

v

உயிரிழந்த விலங்குகளை கையாள்வது குறித்த முக்கிய வழிகாட்டுதல்கள்

December 6, 2025

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, , இறந்த விலங்குகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த

central-bank

மத்திய வங்கி விசேட அறிவிப்பு

December 6, 2025

அண்மையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வினைத்திறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்காக, இலங்கை மத்திய

Dead

காணிப் பிரச்சினை; ஒருவர் பலி

December 6, 2025

காணிப் பிரச்சினை காரணமாகத் தாக்குதலில் ஒருவர் பலி மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோனபலை பிரதேசத்தில், காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக

ditva

வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்த கழிவுகள் சுற்றாடல் அமைச்சு வெளியிட்ட தகவல்

December 6, 2025

சமீபத்திய வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுவது அதிகரித்துள்ளது. இருந்த போதிலும், தற்போது வரையில் பிராந்திய

ran

மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு

December 6, 2025

ரன்தெம்பே – மஹியங்கனை மின் பரிமாற்ற அமைப்பு தொடர்பில் வௌியான அறிவிப்பு டித்வா புயலின் தாக்கம் காரணமாக செயலிழந்த ரன்தெம்பே

siva

சிவனொளிபாத மலை யாத்திரை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 6, 2025

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

sanakkiyan

நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் பொறிமுறை வேண்டும் – சாணக்கியன்

December 6, 2025

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகக் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அரசாங்கம் துரிதமான பொறிமுறை ஒன்றை உருவாக்க

irsd

சீரற்ற வானிலை; வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்குக் கால அவகாசம்

December 6, 2025

வருமான வரி அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு வருமான வரிக்காகப் பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும், தமது வருமான

kajen

யாழ் மாவட்ட நிதி ஒதுக்கீடு: சந்தேகங்களை அரசு தீர்க்க வேண்டும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

December 6, 2025

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இதனால் இந்த நிதி ஒதுக்கிடு

mora

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரிக்கின்றது!

December 6, 2025

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது மிக அதிகமாக இருப்பதாகவும், அதன் சேமிப்புக் கொள்ளளவில் 97.87 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் பொலன்னறுவையில் உள்ள