பூசா சிறையில் அடைக்கப்பட்டுள்ள மிதிகம ருவான் என்ற பாதாள உலகத் தலைவர் துபாயில் மறைந்திருக்கும் டுபாய் லொக்கா என்ற பாதாள உலகக் குற்றவாளிக்கு வழங்கிய ஒப்பந்தத்தின் பேரில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தப் பணம், டுபாயில் மறைந்திருக்கும் ‘ரன் பாட்டியா’ என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் இந்த கொலையை செய்த சந்தேநபருக்கு வழங்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
வெலிகம பிரதேச சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தாரக நாணயக்காரவின் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவமும் மிதிகம ருவானின் உத்தரவின் பேரில் டுபாய் லொக்காவினால் திட்டமிடப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
டுபாய் லொக்கா மிதிகம ருவானின் பாதாள உலகக் கும்பலின் சிறந்த உதவியாளராக மாறிவிட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.