யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன், யாழ்.நூலகர், உதவி நூலகர், நூலக பணியாளர்கள், வாசக வட்டத்தினர், கே.எம்.செல்லப்பாவின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.