யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் படுகொலை; 17 வருடங்களின் பின் தண்டனை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. மகேஸ்வரன் படுகொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்று கூறப்படுபவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட ஜோன்சன் கொலின் வாலண்டினோ அல்லது ‘வசந்தன்’ தாக்கல் செய்த மேன்முறையீட்டை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நீதியரசர்கள் யசந்த கோடகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​மனுதாரரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் போது முன்வைக்கப்பட்ட இரண்டு உண்மைகளை நிரூபிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாததால் மனுவை மீள பெற அனுமதிக்குமாறு கோரினார்.

2008, ஜனவரி 1, அன்று கொழும்பு பொன்னம்பலவனேஸ்வரர் சிவன் கோவிலுக்குள் மகேஸ்வரன் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மகேஸ்வரனின் மெய்க்காப்பாளர்களுடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றம் சாட்டப்பட்டவரும் காயமடைந்தார்.

இதனையடுத்து மகேஸ்வரனும், குற்றம் சாட்டப்பட்டவரும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், தன்னைச் சுட்ட நபர் என்று குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காட்டினார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் இரத்தத்தில் இருந்து பெறப்பட்ட டி.என்.ஏ சான்றுகள் அவரைக் குற்றத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

இவை மறுக்க முடியாத உண்மைகள் என்று மனுதாரர் சட்டத்தரணி ஒப்புக்கொண்டார், எனவே, மனுவை மீள பெற நீதிமன்றத்திடம் அனுமதி கோரினார்.

மனுதாரர் விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, தீர்ப்பை உறுதி செய்தது.

vi

உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும் – தவெக தலைவர் விஜய்

December 18, 2025

”வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது,”

ch

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் உடன் சிக்கிய கடல் புறா?

December 18, 2025

கர்நாடக கடற்கரையில் சீன ஜிபிஎஸ் டிராக்கர் பொருத்தப்பட்ட கடல் புறா கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கடற்படை தளத்தை உளவு

ner

முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை

December 18, 2025

முன்னாள் பிரதமர் நேரு தொடர்புடைய ஆவணங்கள் எதுவும் தொலைந்து போகவில்லை; எல்லாமே 2008ம் ஆண்டு முதல் காங்கிரஸ் முன்னாள் தலைவர்

anna

திருப்பூர் போராட்டத்தில்,அண்ணாமலை கைது

December 18, 2025

குப்பை கொட்டும் விவகாரத்துக்கு தீர்வு கோரி நடந்த போராட்டத்தில், பங்கேற்ற தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

arrest

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியவர் கைது

December 18, 2025

புத்தளத்தில் கொரிய நாட்டவரை தாக்கியதாகக் கூறப்படும் நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வேவா வீதியைச் சேர்ந்த 39

thara

தாராபுரம் பகுதியில் சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் ஒருவர் கைது!

December 18, 2025

மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

cr

பொலன்னறுவையில் லொறிச் சாரதியின் சடலம் மீட்பு !

December 18, 2025

பொலன்னறுவை, மனம்பிட்டிய – கொடலீய பாலத்திற்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கை, கால்கள்

ju

கைதாகிய பிள்ளையானின் சகா விடுதலை!

December 18, 2025

குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித்

mas

மஸ்கெலியா பிரதேச சபையின் வரவு-செலவுத் திட்டம் நிறைவேற்றம்

December 18, 2025

மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது.

namal

பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீடு சுற்றறிக்கை வேண்டும் – நாமல் ராஜபக்ச

December 18, 2025

‘டித்வா’ பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை கணக்கிடுவது குறித்து ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மொட்டுக் கட்சியின்

ris

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தேரருக்கு நன்றி கூறிய ரிஷாட்

December 18, 2025

கண்டி, கம்பளையில் வெள்ள அனர்த்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கெலியோயா, எல்பிட்டிய மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த எல்பிட்டிய பொத்துகல் விகாரைக்கு அகில

dd

சூறாவளியை எதிர்கொள்ள முன்னாயத்தங்கள்; விசேட தெரிவுக்குழு நியமிக்கவும்

December 18, 2025

டித்வா சூறாவளியை முகம்கொடுப்பதற்காக முன்னாயத்தங்கள் இல்லாமை தொடர்பில் முழுமையாக ஆராய்வதற்காக விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித்