மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 81.5 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் அந்த அணி 118.5 ஓவர்களில் 390 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 25 ரன்களும், சாய் சுதர்சன் 30 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 35.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 20-வது அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் 108பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும், துருவ் ஜூரெல் 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக சாய் சுதர்சன் 39, கேப்டன் ஷுப்மன் கில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தனர்.

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஆட்ட நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார். தொடர் நாயகனாக ரவீந்திர ஜடேஜா தேர்வானார். அவர், பேட்டிங்கில் ஒரு சதம் உட்பட 104 ரன்களும், பந்து வீச்சில் 8 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

27 வெற்றிகள்: 2002-ம் ஆண்டு முதல் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்திய அணி ஒரு டெஸ்டில் கூட தோல்வி அடையவில்லை. அதேநேரத்தில் 10 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 2002-ல் தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டிருந்தது.

‘நம்பிக்கையை அதிகரிக்கும்’ – தோல்வி குறித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் கூறும்போது, “இந்தப் போட்டியில் எங்களுக்குக் கிடைத்த நேர்மறையான விஷயங்கள் என்னவென்றால், கேம்பல் மற்றும் ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி சதம் அடித்தனர். அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள், நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் 100 ஓவர்கள் வரைபேட் செய்தோம். ஆட்டத்தை 5-வது நாளுக்கு எடுத்துச் சென்றது மிகவும் சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதுமே 80 ஓவர்களுக்கு மேல் எப்படி பேட்டிங் செய்வது என்று விவாதிப்போம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக பேட்டிங் செய்வது, ஸ்வீப் செய்வது, கால்களைப் பயன்படுத்துவது என பல யோசனைகளை நாங்கள் கொண்டு வந்தோம். அணியில் உள்ள வீரர்கள் கரீபியனில் சிறந்த வீரர்கள். கடைசி டெஸ்ட் போட்டியில் கிடைத்த நேர்மறையான விஷயங்களை வரவிருக்கும் தொடருக்குச் செல்ல ஒரு படிக்கல்லாகவும் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வழியாகவும் பயன்படுத்துவோம். இங்கிருந்து முடிந்தவரை முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்” என்றார்.

‘பொறுப்புகள் மிகவும் பிடிக்கும்’ – மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சாத்தியமான முடிவை எடுக்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் எந்த வீரரால் ரன்கள் எடுக்க முடியும் அல்லது விக்கெட்டுகளை வீழ்த்திகொடுக்க முடியும் என்பதைப் பொறுத்து தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். எனக்குப் பொறுப்புகள் பிடிக்கும். அதை என் வழியிலேயே செய்கிறேன். சில முக்கிய முடிவுகளை எடுப்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, அது என்னுள் இருக்கும் சிறந்ததை வெளிக்கொண்டு வருகிறது. பாலோ-ஆன் கொடுத்த போது நாங்கள் சுமார் 300 ரன்கள் முன்னிலையில் இருந்தோம். ஆடுகளம் உயிர்ப்பிப்புடன் இல்லை. எனவே நாங்கள் 2-வது இன்னிங்ஸ் விளையாடி 500 ரன்கள் எடுத்தாலும், 5-வது நாளில் 6 அல்லது 7 விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தால் அது எங்களுக்கு கடினமான நாளாக இருக்கலாம் என்று நினைத்தோம். அதை நினைத்துதான் பாலோ-ஆன் முடிவை எடுத்திருந்தோம்” என்றார்

HinduTamil

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.

tab

மருந்துகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை – வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம

November 18, 2025

சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் சுமார் 350

wea

தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது…

November 18, 2025

இலங்கைக்கு மேலாக நிலை கொண்டுள்ள தாழ் அமுக்கப் பிரதேசம் மேலும் தொடர்கின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து

senthoora

புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

November 18, 2025

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை