ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு ஒரு நாள் திரும்ப எதிர்பார்ப்பதாக அக்கழகத்தின் முன்னாள் வீரர் லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
பார்சிலோனாவில் 13ஆவது வயதில் இணைந்து 21 ஆண்டுகள் இருந்த 38 வயதான மெஸ்ஸி புதிய அரங்கத்துக்கு விஜயம் செய்த பின்னரே இக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
மெஸ்ஸியைத் தக்க வைக்கக் கூடிய நிதி நிலைமையை பார்சிலோனா கொண்டிருக்காத நிலையில் 2021ஆம் ஆண்டு பார்சிலோனாவிலிருந்து வெளியேறிருந்தார்.
வீரரொருவராக ஒருபோதும் செய்ய முடிந்திருக்காத பிரியாவிடையை மாத்திரம் சொல்வதற்காக மட்டுமன்றி ஒருநாள் தான் திரும்புவேன் என நம்புவதாக மெஸ்ஸி கூறியுள்ளார்.
ஐ. அமெரிக்க மேஜர் லீக் சொக்கர் கழகமான இன்டர் மியாமியுடன் 2028ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தத்தை மெஸ்ஸி கொண்டிருக்கிறார்.