சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்துடைய பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் ‘பராசக்தி’ படத்துடைய அடுத்தக்கட்ட பணிகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘பராசக்தி’ ரிலீசாக இருக்கிறது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி கொண்டிருக்கிறது. எஸ்கேவுடைய 25வது படமாக ‘பராசக்தி’ உருவாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படத்துக்கான இறுதிக்கட்ட பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
‘பராசக்தி’ அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து, நடிகர் ரவி மோகன் டப்பிங் பேச ஆரம்பித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் பொங்கல் ரேஸில் பங்கேற்க ‘பராசக்தி’ முழு வீச்சில் தயாராகி வருகிறது.
முன்னதாக இந்தப் படத்தில் எஸ்கேவுக்கு ஜோடி இல்லை. அதர்வாவுக்கு ஜோடியாகே ஸ்ரீலீலா இப்படத்தில் நடித்து இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான பர்ஸ்ட் சிங்கிள் மூலமாக அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘பராசக்தி’ படத்துக்காக முதன்முறையாக வில்லன் அவதாரம் எடுத்துள்ள ரவி மோகன், டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அதர்வா, ராணா, ஸ்ரீலீலா ஆகியோர் எஸ்கேவுடன் இணைந்து முக்கியமான ரோலில் நடித்துள்ளனர். சூரரைப் போற்றுக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, சுதா கொங்கரா இப்படத்தினை இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட வரலாறுகளை மையமாக வைத்து உருவாக்கியுள்ளார்.
இந்தப்படம் எஸ்கேவின் திரை வாழ்வில் மிகப்பெரிய மைற்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சூர்யா நடிப்பில் ‘பராசக்தி’ உருவாகவிருந்த நிலையில், அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடித்திருக்கிறார். பொங்கல் ரிலீசாக அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது.
இதனிடையில் விஜய்யின் ஜனநாயகனும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. பராசக்திக்கு முன்பாக ஜனவரி 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்துடைய பர்ஸ்ட் சிங்கிள் சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. தெருக்குரல் அறிவு எழுதியிருந்த இப்பாடலை நடிகர் விஜய், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், அறிவு ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர். ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியான இந்த பர்ஸ்ட் சிங்கிள் டிரெண்டிங்கில் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.