முல்லைத்தீவு நெற்கொள்வனவு தாமதம் குறித்து துரைராசா ரவிகரன் கேள்வி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தின்போது நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவுசெய்யப்பட்ட 304 மெற்றிக்தொன் நெல் பயன்டுத்தப்படாமல் களஞ்சியசாலைகளில் நிறைந்திருப்பதால் ஏற்பட்டுள்ள களஞ்சியசாலை நெருக்கடியினாலேயே நெல்சந்தைப்படுத்தல்சபையினால் தற்போது விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நெல் சந்தைப்படுத்தல்சபை விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன்.அந்தவகையில் கடந்த 20.01.2026 பாராளுமன்றில் நெற்கொள்வனவை விரைந்து ஆரம்பிக்குமாறு வலியுறுத்தியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து கடந்த 21.01.2026அன்று இடம்பெற்ற விவசாய அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இதுதொடர்பில் பேசியபோது அமைச்சர் லால்காந்த மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகளால் கடந்த 26.01.2026அன்று நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து 27.01.2026அன்று இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும் நெற்கொள்வனவு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அதன்போது மறுநாள் 28ஆம் திகதியிலிருந்து நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படுமென முல்வைத்தீவு மாவட்டசெயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் ஆகியோரால் பதில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை நெற்கொள்வனவை ஆரம்பிக்கவில்லை.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினுடைய நெற் களஞ்சியசாலைகளில் ஏற்கனவே கடந்த 2025ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கைக்காலத்தில் கொள்வனவுசெய்த நெல் உரியவகையில் அகற்றப்படாமல் இருப்பில் இருப்பதாக அறியமுடிகின்றது. இதனாலேயே நெற்கொள்வனவிற்கு காலதாமதம் ஏற்படுவதாகவும் அறிகின்றோம்.

அந்தவகையில் தண்ணீரூற்று நெற் களஞ்சிய சாலையில் 10மெற்றிக்தொன் நெல் இருப்பில் காணப்படுவதுடன், புதுக்குடியிருப்பில் 15மெற்றிக்தொன், உடையார்கட்டு 25மெற்றிக்தொன், முள்ளியவளை 100மெற்றிக்தொன், கோம்பாவில் 20மெற்றிக்தொன், வித்தியாபுரத்தில் 130மெற்றிக்தொன் என முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல்சந்தைப் படுத்தல் சபைக்குரிய களஞ்சியசாலைகளில் மொத் 304மெற்றிக்தொன் நெல் களஞ்சியசாலைகளின் இருப்பில் தேங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.

ஏற்கனவே 2025ஆம் ஆண்டு சிறுபோகக் காலத்தில் நெல்சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்டநெல் களஞ்சியங்களில் தேங்கியிருப்பதற்கான காரணம் என்ன?

இவ்வாறு களஞ்சியசாலையில் தேக்கநிலையில் உள்ள நெல்லினை உரியகாலத்தில் வெளியேற்றி களஞ்சியசாலையை நெற்கொள்வனவிற்கு ஏற்றவாறு நெல் சந்தைப்படுத்தல்சபை தயார்நிலையில் வைத்திருந்திருக்கவேண்டும்.

ஆனால் நெல்சந்தைப்படுத்தல் சபையினர் அசமந்தப்போக்குடன் இருந்ததினாலேயே தற்போது களஞ்சியசாலைகள் இடமின்றி நிறைந்திருக்கின்றன.

எனவே தற்போது நெற்கொள்வனவிற்கென அரசால் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளபோதும் நெல்சந்தைப்படுதனதல் சபையின் அசமந்தப்போக்கால் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவுசெய்வதற்கு களஞ்சியசாலைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தல் சபை அதிகாரிகளினால் உறுதியுரைக்கப்பட்டதைப்போன்று விவசாயிகளிடமிருந்து இன்னும் நெற்கொள்வனவு மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக குமுழமுனைப்பகுதியில் மாத்திரம் நெல்சந்தைப்படுத்தல் சபையினர் நெல்தரங்களைப் பார்வையிட்டதுடன், எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து நெற்கொள்வனவை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாயிகளிடம் தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.

இவ்வாறாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் அசமந்தப்போக்கினால் தற்போது விவசாயிகளே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஏற்கனவே டித்வா புயல் வெள்ள அனர்த்தங்களினாலும், தொடந்து நிலவும் வானிலையாலும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள விவசாயிகளுக்கு, நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெற்கொள்விலும் காலதாமதம் ஏற்படுவது மேலும் அவர்களை பாதிப்பிற்குள்ளாக்குவதாக அமைகின்றது.

எனவே நெல் சந்தைப்படுத்தல் சபையினர் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்படாமல் விரைந்து விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவை மேற்கொள்ள ஆரம்பிக்கவேண்டும்.

அவ்வாறு விரைவாக நெற்கொள்வனவை மேற்கொள்ளத் தவறினால் விவசாயிகளுடன் இணைந்து நெல்சந்தைப்படுத்தல் சபைக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும் – என்றார்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.