முல்லைத்தீவு – துணுக்காய் கோட்டை கட்டியகுளம் வித்தியாலயத்திற்கு ரவிகரன் விஜயம்

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலயத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாக சென்று, அங்கு நிலவும் குறைபாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கேட்டறிந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, பாடசாலையின் உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகள் சார்ந்த பின்வரும் குறைபாடுகள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டன:

ஆசிரியர் பற்றாக்குறை: பாடசாலையில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
உட்கட்டமைப்பு வசதிகள்: பாடசாலை வளாகத்திலுள்ள பாதுகாப்பற்ற பழைய கட்டடங்களை அகற்றுதல், பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி அமைத்தல் மற்றும் மிதிவண்டித் தரிப்பிடம் (Cycle Shed) அமைத்தல்.
புதிய கட்டடத் தேவை: மேலதிகமாக 8 வகுப்பறைகளைக் கொண்ட கட்டடங்களின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
சுகாதார வசதிகள்: மாணவர்களுக்கான முறையான மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
ஏனைய தேவைகள்: போக்குவரத்துச் சீரின்மை, விளையாட்டு உபகரணங்களின் தேவை மற்றும் வகுப்பறைகளுக்கான தளபாடப் பற்றாக்குறை.
குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இவை தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று, தீர்வுகளைப் பெற்றுத்தரத் தன்னால் முடிந்த நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

ddd

குருக்கள் மடத்தில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி!

March 17, 2026

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான நீதிமன்ற

Ottawa

ஒட்டாவாவில் பனிப்புயலால் மின்வெட்டு; நெடுஞ்சாலைகளும் மூடல்

March 17, 2026

ஒட்டாவா–ஹெட்டினோ பகுதியை கடுமையான பனிப்புயல் தாக்கியதால் இன்று செவ்வாய்க்கிழமை காலை பத்தாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி சிரமத்துக்காளாகினர் எனவும் நெடுஞ்சாலை

Manocha

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இந்திய மாணவன் கொலை!

March 17, 2026

இந்தியாவைச் சேர்ந்த ஒரு சர்வதேச மாணவர் கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் கொலம்பியா வடகிழக்கு பகுதியில் கொல்லப்பட்டுள்ளார். றோயல் கனேடியன் மவுண்டட்

Pera

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையிலிருந்து தப்புவது எப்படி?

March 17, 2026

நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர்

nalintha-1

பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகின்றது

March 17, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்யும் வரை, நாளை (18) முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை

Publi

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை; புதிய சுற்றுநிருபம் வெளியீடு

March 17, 2026

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,

Ali Larijani

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் பலி

March 17, 2026

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர்

Education

தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை

March 17, 2026

புதன்கிழமைகளில் தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

heal

எரிபொருள் நெருக்கடி; சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

March 17, 2026

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, சுகாதார

jud

பாரிய பண மோசடி: கைது செய்யப்பட்ட பெண் 40 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிப்பு

March 17, 2026

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண் ஒருவரை,

alagana

பம்பரக்கலை கிராமத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள்

March 17, 2026

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமான ‘நாட்டை மேம்படுத்தும் அழகான கிராமம்’ எனும் கருப்பொருளின்

Omar hospital

காபூல் மருத்துவமனை மீது வான்வழித் தாக்குதல் : 400 பேர் பலி

March 17, 2026

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு இடையே கடந்த மூன்று வாரங்களாக நீடித்து வரும் மோதல், தற்போது பெரும் மனிதநேயப் பேரழிவாக