முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பெண்கள் மற்றும் ஆண்கள் அவர்களின் உயிரியல் அடிப்படைக்கு புறம்பாக விருப்பத்திற்கேற்ப அறுவைசிகிச்சை மூலம் தங்கள் பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தமை தொடர்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாலின அடையாளத்தை மாற்றிக்கொள்ள கடந்த அரசாங்கங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்கள் சட்டவிரோதமானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சார்பில் சட்ட மாஅதிபருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை விமானப்படையின் ஓய்வுபெற்ற உறுப்பினரான சாந்த ஜயதிலகவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரித்தி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒருவார காலத்திற்குள் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் பிறப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

வழக்கு எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

உயிரியல் அடிப்படையை பொருட்படுத்தாமல் மருத்துவ அறுவைசிகிச்சை மூலம் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக்கொள்ள சட்டபூர்வ இயலுமை கிடையாது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் உளநல மருத்துவவரின் பரிந்துரை சான்றிதழின் அடிப்படையில் ஒருவர் தனது பாலின அடையாளத்தை அறுவைசிகிச்சை மூலம் மாற்றுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

2016ஆம் ஆண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் மற்றும் வழிகாட்டல் கோவைக்கு அமைய இதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பாலின மாற்றத்திற்கு உட்படுபவர்களுக்கு புதிய பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகின்றார்.

இது முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் பாலின மாற்றங்களை உட்படுத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒருவரின் பாலியல் அடையாளத்தை மாற்றுவது ஓரின திருமணங்களுக்கு வழிவகுக்கும் எனவும் இது சட்டத்திற்கு முரணானது எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பிற்கமைய பொதுமக்கள் கருத்துக்கணிப்பு இன்றி பாலினத்தை மாற்றிக்கொள்வது சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத செயற்பாட்டுக்கு இடமளிப்பதனூடாக பிரதிவாதிகள் அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டுகின்றார்.

அதற்கமைய உயிரியல் அடிப்படையை பொருட்படுத்தாமல் விரும்பியபடி அறுவைசிகிச்சையின் மூலம் ஒருவரின் பாலின அடையாளத்தை மாற்றுவதற்கான சாத்தியத்தை அனுமதித்து வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் திட்டங்களையும் வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், மகளிர் விவகார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

cham

பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் பணி இடைநிறுத்த விவகாரம்: ரிட் மனு மார்ச் 18 இல் விசாரணைக்கு!

March 3, 2026

எவ்வித நியாயமான விசாரணையுமின்றி தனது பணி இடைநிறுத்தப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் ரிட் உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்றத்தின்

amazo

அமேசான் நிறுவனத்தின் பல தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான் நிறுவனத்தின் பல

masoo

அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெறுகின்றன – ஈரான் ஜனாதிபதி

March 3, 2026

தனது நாட்டுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் வழமை போன்று இடம்பெற்று வருவதாக ஈரான்

Ruvan Ranasinga

சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிவு?

March 3, 2026

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்குகளை அடைய முடியவில்லை

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த