மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – மன்னாரில் ஜனாதிபதி

மீனவ சமூகத்தின் உரிமைகள் மீறப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்றும், நிலம் மற்றும் கடல் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அரசாங்கம் செயல்படுகின்றது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடு முழுவதும் உள்ள மீனவ சமூகங்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

மன்னார் மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பதற்கும் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்காக நேற்றைய தினம் (13) பிற்பகல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்காகத் தொடங்கப்பட்ட திட்டத்தை முறையான ஆய்வை மேற்கொண்டதன் பின்னர் தொடர்ந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மன்னாரில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக மீனவ சமூகம் எதிர்கொண்ட பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்போது சுமார் 12,000 மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இதன்போது தெரியவந்தது.

வெள்ளத்தால் பாதிக்கப்படாவிட்டாலும், சீரற்ற வானிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு ஒரு வாரத்திற்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மீன்பிடி உபகரணங்களை வழங்குவதற்காக சீன தூதரகத்துடன் கலந்துரையாடுவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

யோத வாவி நீரேந்துப் பகுதியில் சட்டவிரோதமாக காணிகள் கையகப்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குளங்களின் எல்லைகளில் கற்களை இடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மன்னார் மாவட்டத்தில் 70 குடும்பங்கள் அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்துள்ளதோடு, அந்த வீடுகளை நிர்மாணிப்பது மற்றும் இதற்கு தேவையான காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்காக ஒரு குழுவை நியமித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் உரிய காணிகளை அடையாளம் காண்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மன்னார் மாவட்ட வைத்தியசாலை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் வசதிகளை விரிவுபடுத்துதல், சுகாதார சேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை மீட்டெடுப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பாடசாலை மாணவர்களுக்காக திறைசேரியினால் வழங்கப்படும் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்களின் பரிந்துரையின் பேரில் பிரதேச செயலாளர்கள் மூலம் விரைவாக வழங்கி நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் சேதமடைந்த பாதைகள் மற்றும் பாலங்களை நிர்மாணித்தல், நீர் வழங்கல் மற்றும் மின்சார விநியோகத்தை சீர்செய்தல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை புனரமைத்தல், விவசாயம் மற்றும் கால்நடைத் துறைகளில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் மக்கள் தமது வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவதற்கான சூழலை உருவாக்குதல் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் உபாலி சமரசிங்க, வட மாகாண ஆளுநர் என். வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். திலகநாதன், எம். ஜெகதேஸ்வரன், டி. ரவிகரன், சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், ரிஷாத் பதியுதீன் ஆகியோர், நிதி அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர் டி. முருகேசன், மன்னார் மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By C.G.Prashanthan

mex

சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி 7 பேர் பலி

December 16, 2025

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவிலிருந்து சிறிய

chi'

தென் அமெரிக்க நாடான சிலியில் 35 ஆண்டுக்கு பின் மீண்டும் வலதுசாரி அரசு

December 16, 2025

சிலியின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளரான ஜோஸ் அன்டோனியோ காஸ்ட் அதிக ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார். தென் அமெரிக்க

hong

தேசத்துரோக வழக்கு; ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபர் குற்றவாளி

December 16, 2025

ஹாங்காங்கின் பிரபல நாளிதழ் அதிபரும், ஜனநாயக போராளியுமான ஜிம்மி லாய், 78, சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட

au pa

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ – ஆஸி பிரதமர்

December 16, 2025

‘துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்’ என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார். ஆஸ்திரேலியாவில்

be

யுனைட்டெட் – போர்ண்மெத் போட்டி சமநிலையில்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், தமது மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியை 4-4 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர்

saba3

பெண்கள் டென்னிஸ்; சிறந்த வீராங்கனையாக சபலெங்கா

December 16, 2025

தரவரிசையில் ஆண்டு முழுவதும் முதலாமிடத்தில் இருந்ததைத் தொடர்ந்து பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் ஆண்டின் சிறந்த வீராங்கனையாக பெலாரஸின் அர்யனா சபலெங்காவை

de

பொரெஸ்டிடம் தோற்ற டொட்டென்ஹாம்

December 16, 2025

இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில், நொட்டிங்ஹாம் பொரெஸ்டின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம்

pre

பிரிமியர் லீக் ஏலம்: யாருக்கு ‘ஜாக்பாட்’

December 16, 2025

இந்தியாவில், பிரிமியர் லீக் (‘டி-20’) 19வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட

ru

ரஷ்ய ஏவுகணை எரிபொருள் ஆலைகள் மீது அதிரடி தாக்குதல்

December 16, 2025

ரஷ்ய எரிவாயு பதப்படுத்தும், ஏவுகணை எரிபொருள் ஆலைகளைத் தாக்கியதாக உக்ரைன் அறிவித்துள்ளது. தெற்கு ரஷ்ய நகரமான அஸ்ட்ராகானில் உள்ள ஒரு

bre

தெற்கு பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர சிலை

December 16, 2025

தெற்கு பிரேசிலில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீட்டர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை திங்கட்கிழமை

rail

18 நாட்களுக்கு பின் கிழக்கு ரயில் ஓடுகிறது…

December 16, 2025

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்கள், பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்த பதினெட்டு நாட்களுக்குப் பிறகு, இன்று (16) காலை முதல்

thi

முன்னாள் சபாநாயகர் ஏற்படுத்திய விபத்து சபைக்கு வருகிறது

December 16, 2025

முன்னாள் சபாநாயகர் எம்.பி. அசோக ரன்வல ஓட்டிச் சென்ற வாகனம் விபத்தை ஏற்படுத்தியதில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை