மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை (12) கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்றையதினம் இரவு 11.00 மணிவரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும்.
சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது, அதேவேளை, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
இந்த காலகட்டத்தில் 08 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 07 மாவட்டங்களுக்கு அம்பர் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளது.