சென்னை,
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இறுதி நிலையை எட்டியுள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான கோடை வெயிலையும் தாண்டி மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிப் புதிய வரலாறு படைத்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரப்படி, மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சேர்த்து சராசரியாக 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் மொத்த வாக்குகளையே (4.63 கோடி) மிஞ்சியுள்ளது. இன்று மாலை 5 மணி நிலவரப்படியே 4.71 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மாலை 5 மணி நிலவரப்படி அதிக வாக்குகள் பதிவான டாப் 5 தொகுதிகள்:
1. குமாரபாளையம் – 90.98%
2. சங்ககிரி – 90.30%
3. கிருஷ்ணராயபுரம் – 89.83%
4. பவானி – 89.57%
5. காங்கேயம் – 89.46%
தற்போது மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதி நேர நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 6 மணிக்கு மேல் வரிசையில் நின்றவர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
#TNElection2026 #VoteRecord #TamilNaduElection #VotingPercentage #DemocracyFestival #HistoryMade #TNAssemblyElection #April23 #VoterTurnout #ElectionUpdate #BreakingNews #TamilPolitics #75ThousandBooths #ElectoralParticipation #ChennaiPolitics #ADMK #DMK #TVK #NTK #NewRecord