திங்கட்கிழமை முதல் மாரிடைம்ஸ் பகுதிகளில் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்றுடன் ‘நோர்’ஈஸ்டர்’ புயல் ஆரம்பித்துள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் மேலும் ஒரு புயல் மாரிடைம்ஸ் பகுதிகளுக்குள் நகர்ந்து வருகிறது.
இந்த புதிய ‘நோர்’ஈஸ்டர்’ புயல் குறிப்பிடத்தக்க அளவில் பனிப்பொழிவையும் பலத்த காற்iwAk; ஏற்படுத்தும். இதனால் பயண தாமதங்கள்,போக்குவரத்து சேவை ரத்துகள் மற்றும் மின்தடை ஏற்படும் அபாயமும் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் பரவலாக 15 முதல் 25 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக Nova Scotia, New Brunswick-இன் தென்கிழக்கு பகுதி மற்றும் Prince Edward Island பகுதிகளில் அதிகளவு பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சில பகுதிகளில் 25 சென்டிமீட்டரைத் தாண்டி பனிப்பொழிவு ஏற்படலாம். குறிப்பாக South Shore (நோவா ஸ்கோஷியாவின் தெற்கு கரையோர பகுதி) பகுதிகளில் திங்கட்கிழமை பிற்பகலில் அதிக தீவிர பனிப்பொழிவு காரணமாக மொத்த அளவு 25 முதல் 40 சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.
பரவலாக மணிக்கு 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்; வெளிப்புற திறந்த பகுதிகளில் இது 90 கிமீ/மணி வரை அதிகரிக்கக்கூடும். இந்த பலத்த காற்றால் பனி பறந்து திரண்டு குவியும்.
இன்று திங்கட்கிழமை இரவு Atlantic coastline பகுதிகளிலும், செவ்வாய்க்கிழமை Northumberland Strait பகுதிகளிலும் இயல்பை விட அதிகமான கடல்மட்ட உயர்வு காணப்படலாம்.