சுமார் 20 வருடங்களாக புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடத்தை குத்தகை அடிப்படையில் பெற்று அதனை நடத்திவந்த மஹிந்தானந்த அறக்கட்டளையின் உடமைகள் மீண்டும் புகையிரத திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் இயங்கி வந்த மஹிந்தானந்த அளுத்கமகே அறக்கட்டளை மற்றும் அதனைச் சார்ந்த வளாகத்தை ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் புகையிரத திணைக்களத்திடம் கையகப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, புகையிரத திணைக்கள அதிகாரிகளிடம் அந்த அறக்கட்டளைக் கட்டடங்கள் மற்றும் காணியை மீண்டும் ஒப்படைக்கும் பணி மஹிந்தானந்த அறக்கட்டளையின் செயலாளர் சாமிக தர்மதிலகவினால் முன்னெடுக்கப்பட்டது.
எதிர்காலத்தில் இக்காணியை மக்களுக்குப் பயனுள்ள வகையில் பொதுச் சந்தை வளாகமாகவும், ஏனைய நிறுவனங்களுக்காகவும் வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.