முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக உதவத் தயாரென பிரதான இரண்டு நாடுகள் உறுதிமொழி வழங்கியுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது.
மஹிந்த பயன்படுத்திய புல்லட் ப்ரூவ் எனப்படும் குண்டுகள் துளைக்காத வாகனங்களை அரசாங்கம் மீளப்பெற்றுள்ள நிலையில், அப்படியான வாகனங்களை மஹிந்தவுக்கு வழங்க முடியுமென இரு நாடுகள் மஹிந்தவிடம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இராஜதந்திர சிறப்புரிமைகளைப் பயன்படுத்தியா அல்லது நன்கொடையாக வழங்கும் அடிப்படையிலா இந்த உதவி வழங்கப்படவுள்ளதென்பது பற்றி இன்னும் தெரிய வரவில்லை. எவ்வாறாயினும் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகளின் தூதுவர்கள் இது தொடர்பில் மஹிந்தவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு மஹிந்த தரப்பிலிருந்து இதுவரை பதில் வழங்கப்படவில்லை.
எவ்வாாறாயினும் வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்நாட்டு விடயங்களில் இவ்வாறான தலையீடுகளை செய்வது தொடர்பில் அரசும் கவனம் செலுத்துமென மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.