கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல நோயாளி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஏழு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
மனநல நோயாளி வீட்டில் இருந்தவர்களில் ஒருவர். இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் கத்தியால் குத்தப்பட்டு கண்டி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.