பொதுமக்களின் பணத்தை மிகவும் நுட்பமான மற்றும் மோசடியான முறையில் சுரண்டும் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 24 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி அடையாளம் கண்டுள்ளது.
இதுபோன்ற 23 நிறுவனங்கள் முன்னர் அடையாளம் காணப்பட்டதாகவும், நேற்று முன்தினம் மேலும் ஒரு நிறுவனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி நுகர்வோர் உறவுகள் பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, I.C.A.N Advertising (Pvt) Ltd மற்றும் அதன் இணைப்பு வலைத்தளங்களான icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercuts.net மற்றும் bannercuts.org ஆகியவை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை இயக்குவதாகவும் ஊக்குவிப்பதாகவும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி நீண்டகால விசாரணையை நடத்தி, பல பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு சிறப்பு எச்சரிக்கையை விடுத்த பின்னர் இந்த அறிக்கையை வெளியிட்டது.