நாட்டில் நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வங்கி சேவைகளை அத்தியாவசிய சேவையாக கருதி வாரத்தின் ஐந்து நாட்களும் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திங்கள் முதல் வெள்ளிவரையில் வங்கி செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் புதன்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரையில் வங்கிச் சேவைகள் வரையறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்கள் வாரத்தின் ஐந்து நாட்களிலும் தங்கு தடை இன்றி வங்கிச் சேவைகளை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டை வரையறுக்கும் வகையில் வங்கி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் டிஜிட்டல் வங்கி முறைமைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைய வழிகள் மற்றும் டிஜிட்டல் முறைகளில் வங்கி கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை மத்திய வங்கி சங்கம் கோரியுள்ளது.