மணல் அகழ்வில் பல்வேறு ஊழல் அம்பலம்!

யாழ். வடமராட்சி, அம்பன் கிழக்கு பகுதியில் 2023, 2024 காலப்பகுதியில் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கம் ஊடக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட மணல் விநியோகத்தில் பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தால் கணக்காய்வு நடவடிக்கைகளுக்கென நியமிக்கபட்ட 5 பேர் கொண்ட கணக்காய்வு குழு அறிக்கையினை அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்துள்ளது.

இதில் பல்வேறு ஊழல் குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக 840 உழவு இயந்திர சுமைக்கென கனிய வளங்கல் மற்றும் புவி சரிதவியல் திணைக்களத்திடம் அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்டு 2320 உழவு இயந்திர சுமை மணல் மண் கொட்டோடை பகுதியில் அகழப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 2 மில்லியன் அரச வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு, மணல் அகழ்வு விநியோகம் போன்ற நடவடிக்கைகளின்போது எந்தவொரு நிதி நடவடிக்கையும் வங்கி ஊடாகவும், பிரதேச செயலக முன் அனுமதி பெறப்பட்டு மேற்கொள்ளவில்லை எனவும், குறித்த நிதி நடவடிக்கை கிராம அபிவிருத்தி சங்கம் யாப்பு மற்றும் உப விதிகளுக்கு முரணானது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எந்தவொரு நிதி நடவடிக்கை களுக்கும் உரிய சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லை என்றும், எந்தவொரு கொடுப்பனவு மற்றும் செயற்பாடுகளுக்கும், பொதுச்சபை அல்லது நிர்வாக சபை கூட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தமக்கு வேண்டிய வீதிகள் அமைக்கபட்டமை, பிரதேச செயலகத்தை சேர்ந்த கண்காணிப்பு உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகளும் சபை அனுமதியின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் பௌர்ணமி நாளில் எந்தவொரு கனியவளங்கள் அகழ்வு, மற்றும் விநியோகம், என்பன அரசால் தடுக்கப்பட்டிருந்தும் அதனையும் மீறி மணல் மண் அகழ்ந்து விநியோகிக்கப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் மருதங்கேணி பொலிஸாரால் ஆறு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதற்கான குற்றப்பணமும், சங்க நிதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

eng

இங்கிலாந்து பிறீமியர் லீக்:வொல்வ்ஸிடம் தோற்ற நடப்புச் சம்பியன்கள்

March 4, 2026

இங்கிலாந்து பிறீமியர் லீக்கில், வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான

rana

இலங்கை கிரிக்கெட் சபை பாரியதொரு தவறைச் செய்தது!

March 4, 2026

இலங்கை கிரிக்கெட் சபை நிர்வாகிகளுக்கான தேர்தலில் நிஷாந்த ரணதுங்கவை வெல்ல விடாமல், இடைக்கால நிர்வாகத்தை 2015-இல் நியமித்து பாரியதொரு தவறைச்

gal

முச்சக்கர வண்டியிலிருந்து சடலம் மீட்பு

March 4, 2026

வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரின் சடலம், மொரட்டுவை காலி வீதிப் பகுதியில்

par

பாராளுமன்றில் இறுதி விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

March 4, 2026

பாராளுமன்ற பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த இறுதி விசாரணை அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

arr

ஏழாலையில் 800 லிட்டர் டீசலுடன் இருவர் கைது!

March 4, 2026

800 லிட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று (04) அதிகாலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழாலையைச் சேர்ந்த

fi

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து

March 4, 2026

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இத்தீ சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததுடன்,

nurai

நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணை அறிக்கை கையளிப்பு

March 4, 2026

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக ஒன்பது நிலக்கரி கப்பல்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகள் குறித்த தனது

gol

தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி

March 4, 2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையில் தங்கத்தின் விலை 13,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள்

Galle

காலி கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானிய கப்பல்!

March 4, 2026

ரானிய கடற்படை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 பேர் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காலி

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான