சிவகாசி:
பட்டினப்பாக்கம் மக்களின் ஒப்புதல் இல்லாமல், அங்கு தமிழ்நாடு அரசால் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட முடியாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பகிர்ந்துகொண்ட முக்கியக் கருத்துகள்:
-
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம்: சென்னை பட்டினப்பாக்கத்தில் 27 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். மக்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாது; பரந்தூர் விமான நிலையத் திட்டமும் அப்படிப்பட்டதுதான். எனவே, அப்பகுதி மக்கள் இசைவு கொடுத்தால் மட்டுமே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பணியைச் செயல்படுத்த முடியும்.
-
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்: முதலமைச்சர் விஜய்யின் இங்கிலாந்து பயணம் முழுமையாக இன்னும் நிறைவடையவில்லை. அவர் தனது பயணத்தை முழுமையாக முடித்துவிட்டுத் திரும்பிய பின்புதான், அதுகுறித்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கவோ, கருத்து கூறவோ முடியும்.
-
இடைத்தேர்தல் கூட்டணி: வரவிருக்கும் இடைத்தேர்தலில் ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ (மசவெ) வேட்பாளர்களின் வெற்றிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழுமையாகப் பங்காற்றும்.
-
கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு: பலமுனைப் போட்டிக்கு ஜனநாயகம் இடமளிக்கிறது; அதனை ஆரோக்கியமாகவே அணுக வேண்டும். இடதுசாரி கட்சிகள் தொடக்கத்திலிருந்தே தவெக ஆட்சிக்கு மட்டுமே ஆதரவு அளிப்பதாகவும், இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். தனித்துப் போட்டியிடுவது அவர்களுக்கான ஜனநாயக உரிமை; இந்த முடிவு மசவெ கூட்டணிக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புகிறேன்.
Hashtags:
#Thirumavalavan #VCK #Pattinapakkam #NewSecretariat #CMVijay #TVKGovt #ByElections #LeftParties #TNPolitics #TamilNaduNews #TamilNews #BreakingNewsTamil