பௌத்த கட்டமைப்பை சிதைத்து அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன – தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம்!

த்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படையை சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தவறான கொள்கை கொண்ட சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அதன் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:

எமது கலாசாரத்தின் அடிப்படைத் தத்துவங்களுடன் ஒன்றிணைந்துள்ள பௌத்த கட்டமைப்பை சிதைத்து, அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக, அண்மையில் உடுமளுவ விகாரையின் தலைமை தேரர் தொடர்பில் இடம்பெற்ற சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் சில, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. இது பௌத்த சாசனத்துக்கு பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், சங்கத்துக்குச் சொந்தமான சொத்துக்களைக் கையாளும் வகையில், சங்க சொத்துக்கள் பராமரிப்புச் சபை என்ற பெயரில் புதிய குழுவொன்றை நியமிப்பதற்கான பிரேரணை ஒன்றைக் காண முடிகிறது. 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ளன. இவற்றை மீறி, சங்கத்தின் சொத்துக்களை பராமரிப்புச் சபையிடம் ஒப்படைத்து, அவற்றை இல்லறத்தவர் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்க முயற்சிப்பது ஒரு பாரிய சதித்திட்டமாகும்.

பொலன்னறுவை நிசங்கமல்ல மன்னர் காலத்தில், சங்க சொத்துக்களை இல்லறத்தவர் பயன்படுத்தினால், அவர்கள் நாய் மற்றும் காகங்களாகப் பிறப்பார்கள் எனக் குறிப்பிடப்பட்ட கல்வெட்டுக்கள் எமது கலாசார விழுமியங்களை எடுத்தியம்புகின்றன. அத்தகைய சொத்துக்களை இல்லறத்தவர் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளுவது பாரிய பிழையாகும்.

சங்க சொத்துக்கள் தொடர்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். மாறாக, இவ்வாறான சதித்திட்டங்களை முன்னெடுப்பது சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். எமது நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமாக அமைய வேண்டும். பிக்குகள் குற்றவாளிகள் என இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சில சக்திகள் அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து சமூக மட்டத்தில் அவமானப்படுத்துகின்றன.

1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விகாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்தி சாசனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. எனவே, ஜனாதிபதி மற்றும் பௌத்த சாசன அமைச்சின் பொறுப்பிலுள்ள அதிகாரிகள், பௌத்த மரபுரிமைகளையும் சாசனத்தையும் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புகழ்பெற்ற பௌத்த பாடசாலைகளை மதச்சார்பற்றதாக்கும் மறைமுகமான சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. காட்டை அழிப்பதற்கு அதே காட்டிலுள்ள மரத்தையே பயன்படுத்துவது போல, பிக்குகளையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி சாசனத்தை அழிக்க முனையும் தவறான சக்திகளின் வலைகளில் எமது இளம் பிக்குகள் சிக்கி விடக்கூடாது.

எனவே, அனைத்து சங்கத்தினரும் சாசனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஒன்றிணைய வேண்டும் எனவும், இளம் பிக்குகள் இவ்வாறான சதித்திட்டங்களைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ