போர்ச் சூழல் காரண​மாக பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக் கொண்​டிருந்த, 192 இந்தியர்கள் மீட்​கப்​பட்​டு, சிறப்பு தனி விமானம் மூலம் நேற்று சென்னைக்கு திரும்பினார்.

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்​கியதையடுத்​து, மத்​திய கிழக்கு நாடு​கள் மற்​றும் ஐக்​கிய அரபு நாடு​கள், வளை​குடா நாடு​களின் வான்​வழிப் பகு​தி​கள் மூடப்​பட்​டன.

இதனால், ஐக்​கிய அரபு நாடு​கள், வளை​குடா நாடுகளில் இருந்து விமான சேவை​கள் இல்​லாத காரணத்​தால், பஹ்ரைன் நாட்​டில் உள்ள தமிழர்​கள் ஏராள​மானவர்​கள், இந்​தியா திரும்ப முடி​யாமல், பஹ்ரைன் நாட்​டில் தவித்​துக் கொண்டு இருந்​தனர்.

அவ்​வாறு தவித்​துக் கொண்டு இருந்​தவர்​களில் முதியோர், நோயாளிகள், குழந்​தைகள், கர்ப்​பிணி பெண்​கள் ஆகியோர்​களுக்கு முன்​னுரிமை அளித்​து, அவர்​களை தனி சிறப்பு விமானம் மூலம், சென்​னைக்கு அனுப்பி வைப்​ப​தற்​கு, பஹ்ரைனில் உள்ள தமிழ் சங்​கத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஏற்​பாடு​களை செய்​தனர்.

ஆனால், பஹ்ரைனிலிருந்து சென்​னைக்கு விமான சேவையை நடத்தி வரும் கல்ஃப் ஏர்​வேஸ் விமான நிறு​வனம், தற்​போதைய சூழ்​நிலை​யில், பஹ்ரைனிலிருந்து விமான சேவை நடத்த முடி​யாது என்று கூறி​விட்​டது.

அதேசமயம், பஹ்ரைன் அருகே உள்ள சவூ தி அரேபியாவின் தமாம் நகரில் இருந்து சிறப்பு விமானத்தை இயக்​கு​வதற்​கு, கல்ஃப் ஏர்​வேஸ் விமான நிறு​வனம் சம்​மதம் தெரி​வித்​தது. இதையடுத்​து, பஹ்ரைன் தமிழ் சங்​கத்தை சேர்ந்​தவர்​கள், அதற்​கான ஏற்​பாடு​களை செய்​தனர்.

192 பேர் பஹ்ரைனிலிருந்து பஸ்களின் மூலம், தமாம் நகருக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். தமாம் நகரில் இருந்து கல்ஃப் ஏர்​வேஸ் சிறப்பு விமானம் மூலம், இந்த 192 பேரும் நேற்​று​ முன்​தினம் நள்​ளிரவு சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

இவர்​களில் ஒரு சிலர் விமான டிக்​கெட்​டுக்கு பணம் இல்​லாமல் தவித்​தனர். அவர்​களுக்கு பஹ்ரைன் தமிழ்ச் சங்​கம் மற்​றும் தொண்டு நிறு​வனத்​தினர், உதவி​யுடன் விமான டிக்​கெட்​டு​கள் எடுத்​து, சென்​னைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டனர் என கூறப்​படு​கிறது.

நேற்று காலை அந்த சிறப்பு விமானம், சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு வந்து சேர்ந்​தது. அதில் வந்த 192 பேரும் குடி​யுரிமை, சுங்​கத்​துறை மற்​றும் பாது​காப்பு சோதனை​கள் முடித்து வெளி​யேறினர்.

அவர்​களை தமிழ் சங்​கத்தை சேர்ந்​தவர்​கள், சென்னை விமான நிலை​யத்​தில் வரவேற்​று, அவர​வர் சொந்த ஊர்​களுக்கு அனுப்பி வைத்​தனர்​.

nain

ஈரானின் ஊடகப் பேச்சாளார் ஏவுகணைத் தாக்குதலில் உயிரிழப்பு

March 20, 2026

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் ஜெனரல் அலி முகமது நைனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா

Peat

போருக்கு மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவை – அமெரிக்கா

March 20, 2026

ஈரானுடனான போருக்கு இன்னும் மேலதிகமாக 200 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் கோரியுள்ளது. இது தொடர்பாக

par

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் பயிற்சி !

March 20, 2026

அரசாங்கத் துறையில் சைபர் பாதுகாப்பு குறித்த அறிவை மேம்படுத்தும் நோக்கில், பாராளுமன்ற ஊழியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டம் ஒன்றை இலங்கை

fuel_1

எரிபொருள் விநியோகப்பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும்

March 20, 2026

நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

joh

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

March 20, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது இரு புதல்வர்கள் உள்ளிட்ட 5 சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான்

sathosa

100 பொருட்களுக்கு விசேட விலைக்கழிவு

March 20, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர்

Diese

வர்த்தக நிலையம் ஒன்றில் 720 லீற்றர் டீசலுடன் இருவர் கைது

March 20, 2026

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 720 லீற்றர் டீசலுடன் இரு சந்தேக

Man

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் விசாரணை நிறைவு

March 20, 2026

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று

acc

விபத்தில் மத போதகர் உயிரிழப்பு

March 20, 2026

ஹங்வெல்ல வனஹாகொட பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், முச்சக்கரவண்டியின்

MAnivabnna

விசாரணைக்கு உட்படுத்தப்படும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சட்டத்தரணி மணிவண்ணன் ஆதரவு

March 20, 2026

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் மாணவர்களுக்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அவர்களுடன் இணைந்து

anur

அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரித்தது – ஜனாதிபதி

March 20, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ ரீதியான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில்

bah

போர்ச் சூழல் காரண​மாக பஹ்ரைனில் 18 நாட்களாக தவித்த 192 இந்தியர்கள் மீட்பு

March 20, 2026

இஸ்​ரேல், அமெரிக்​கா, ஈரான் இடையே நிலவி வரும், கடுமை​யான போர் சூழல் காரண​மாக, பஹ்ரைனில் 18 நாட்​களுக்கு மேல், தவித்​துக்