நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மஹரகம அக்கா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
50 வயதுடைய குறித்த பெண், ஈஸி கேஷ் முறை மூலம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தங்கியிருந்த வீட்டில் 32 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் போதைப்பொருள் விற்பனை செய்து சம்பாதித்ததாக கருதப்படும் 141,000 ரூபா பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.