பொன்சேகாவின் கருத்தை வரவேற்கும் நாமல் ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு கொலையாளி அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறியிருப்பது மிகவும் நல்ல விடயமாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“சரத் பொன்சேகா சர்ச்சைக்குரியவராக இருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ பிரபாகரனை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். ஒருபுறம் வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு சுட உத்தரவிட்டதாகக் கூறும் பொன்சேகா, மறுபுறம் அவர்கள் தப்பிச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறுகிறார்.

நாம் யுத்தம் செய்தது தமிழ் மக்களுடன் அல்ல, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுடனேயே ஆகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஒரே நோக்கம் குறைந்தபட்ச உயிரிழப்புகளுடன் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே ஆகும். புலம்பெயர் அமைப்புகளும் ஜே.வி.பி அரசாங்கமும் கூறுவது போல மஹிந்த ராஜபக்ஷ இரத்த தாகம் கொண்டவர் அல்ல என்பதை பொன்சேகா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாட்டை அபிவிருத்தி செய்த, சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த ஒரு தலைவர்.

அதேபோல், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் மகா சங்கத்தினரை ‘ராஜபக்ஷ நிக்காய’ (ராஜபக்ஷ தரப்பு) என விமர்சிப்பது அவர்களின் மனநிலையைக் காட்டுகிறது. மதத் தலைவர்களை அவமதிப்பது அவர்களின் கலாசாரமாக மாறியுள்ளது. பௌத்த மதத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதன் மூலமே ஏனைய மதங்களையும் பாதுகாக்க முடியும். மதத் தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். இது இனவாதம் அல்ல, ஒரு பௌத்தனாக எனது மதத்தை பாதுகாப்பதே எனது கடமையாகும்” என அவர் தெரிவித்தார்.

an

அமைதியான உலகிற்குத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும் – ஜனாதிபதி

March 3, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும்

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து