சென்னை:
சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
<a href="https://youtu.be/4sMZd2aqRFg">https://youtu.be/dZmEDBFMHgo</a>
அழகான கவிதைகள்:
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “பெண் குழந்தைகளைக் கொண்டாடி, உரிமைகளை நிலைநாட்டும் இந்நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள். பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள்! அவர்களின் மழலைச் சிரிப்பு, குடும்பத்தின் மகிழ்ச்சி; அவர்களின் துள்ளல், இயற்கையின் பேரழகு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவ சமுதாயம்:
தொடர்ந்து அவர், ‘பெண் குழந்தை பிறக்கும்போது அன்பும், கருணையும், அளவிட முடியாத ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன. அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை, முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமை. அவர்களின் கனவுகளுக்குச் சிறகளித்து பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்,” என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
#GirlChildDay #CMVijay #GirlChildRights #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive'”