புயலுக்குப் பின்னர் 4,800 மண்சரிவுகள்!

‘டித்வா’ புயலுக்குப் பின்னர் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சுமார் 4,800 மண்சரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆதர் சி. கிளார்க் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ தெரிவித்துள்ளார்.

நேற்று (12) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

‘டித்வா புயல் ஏற்பட்டதன் பின்னர் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தரவுகளைப் பயன்படுத்தி மண்சரிவு வரைபடமாக்கல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

அந்த வரைபடங்களை பகுப்பாய்வு செய்தபோது, ஊடகங்கள் வாயிலாக இதுவரை அறிவிக்கப்பட்டதை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான மண்சரிவுகள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

“செயற்கைக்கோள் புகைப்படப் பகுப்பாய்வு மூலம் நாடு தழுவிய ரீதியில் மண்சரிவுகள் முழுமையாக வரைபடமாக்கப்பட்டதுடன், இதன் மூலம் மொத்த மண்சரிவு சம்பவங்களின் எண்ணிக்கை 4,800 இற்கு அருகில் இருப்பது தெரியவந்துள்ளது.

‘டித்வா’ புயல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி நாம் மண்சரிவுகளை வரைபடமாக்கினோம்.

அந்த வரைபடங்களின்படி, ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரப்படுத்தப்பட்ட மண்சரிவுகளின் எண்ணிக்கையை விடவும் பாரிய அளவிலான மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதை நாம் கண்டறிந்தோம். அந்தச் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகச் சுமார் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.” என்றார்.

கேள்வி: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் 1,241 இடங்களில் பாரிய மண்சரிவுகள் காணப்பட்டதாகக் கூறியிருந்தது. அதைத் தவிர சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மண்சரிவுகள் குறித்து அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் நீங்கள் 4,800 மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாகக் கூறுகிறீர்கள். இது நான்கு மடங்கு அதிகமாகும். அப்படியென்றால் இந்த 4,800 மண்சரிவுகளும் கொஸ்லந்த மண்சரிவைப் போன்ற பாரிய அளவிலானவையா?

பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: “இல்லை, இதில் சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஊடாகப் பெற்றுள்ளோம். அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்கள் வாழும் பகுதிகள் மற்றும் அவர்கள் தலையிட வேண்டிய இடங்களை மாத்திரம் அடையாளம் கண்டிருக்கலாம். ஆனால் எமது செயற்கைக்கோள் புகைப்படங்களில் காடுகளுக்குள் இடம்பெற்ற மண்சரிவுகள் கூடக் கணக்கிடப்படுகின்றன. அதனால்தான் எமது தரவுகளில் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.” என்றார்.

கேள்வி: அப்படியென்றால் இது ‘டித்வா’ புயலின் பின்னர் ஏற்பட்ட மொத்த மண்சரிவுகளின் எண்ணிக்கையா? இது நாடு முழுவதிலுமானதா அல்லது மத்திய மலைநாடு தொடர்பானதா?

பணிப்பாளர் நாயகம் குமாரி மிகஹகொடுவ: “ஆம், இவை ‘டித்வா’ புயலுக்குப் பின்னர் ஏற்பட்டவை. அதிகமான மண்சரிவுகள் மத்திய மலைநாட்டிலேயே பதிவாகியுள்ளன. எனினும், இந்த எண்ணிக்கை நாடு முழுவதையும் உள்ளடக்கிய ஒரு கணக்கெடுப்பாகும். சிறிய அளவிலான மண் சரிவுகளையும் நாம் இதில் கவனத்தில் கொண்டுள்ளோம்.” என்றார்.

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.