புத்தர் சிலை விவகாரம்; திருகோணமலையில் இடம்பெறும் அசம்பாவிதங்கள் திட்டமிட்டவை – இராவண சேனா தலைவர்

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார்.

திருகோணமலை டச்பே கரையோரப் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (17)மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

கடலோரப் பிரதேசங்களில் இடம் பெற்ற கட்டுமானங்களை அகற்றக்கோரிய இடத்தில் தற்போது அடுத்த கட்டமாக பிக்குமாரால் அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்டனர் அதனடிப்படையில் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் பல அழுத்தங்களை கொடுத்து பிறகு இரவு பாதுகாப்பு படையினரால் அகற்றப்பட்டது.

இப்போது மாற்றீடான அழுத்தங்களை மேற்கொண்டு பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியதாவது புத்தர் சிலையின் பாதுகாப்பு கருதியே அகற்றப்பட்டது மீண்டும் அதே இடத்தில் சிலையை வைப்போம் என்று புத்தர் சிலை வைப்பது திருகோணமலைக்கு புதிதான விடயமல்ல எத்தனை ஆயிரம் புத்தர்கள் வைத்து ஆயிரக்கணக்கான மக்களையும் கொன்று புதைத்து அடாத்தாக இடங்களை பிடிக்கும் செயலாகவே நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம்.

இப்போதும் புதிய அரசாங்கம் எமக்கு தீர்வு தரப்போகின்ற அரசாங்கம் அல்லது மிகப் பெரும்பான்மையுடன் இனவழிப்புகளுக்கு எதிரான அரசாங்கம் என்று சொல்லப்படுகின்ற அநுர அரசாங்கம் கூட மகாநாயக்க தேரர்களினதும் அல்லது சிங்கள பௌத்த பேரினவாதிகளினதும் எடுபிடிகளாகவே இருக்கின்றனர் என்பதை தற்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது.

ஆகவே எந்த தமிழர்களுமே இந்த சிங்கள அரசாங்கங்களை நம்புவதற்கு தயாராகவில்லை. முதலில் வலியுறுத்தியது போல எந்த மக்கள் அல்லது எந்த ஊடகங்கள் ,வெளிநாட்டு அமைப்புக்கள் சிங்கள டயஸ்போராக்கள் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக ஆக்கினார்களோ அதே அவர்கள் ஜே.வி.பி எனும் அரசாங்கத்தை அதே முகத்துடன் தேசிய மக்கள் சக்தியை நாட்டின் ஜனாதிபதியாக்கியுள்ளார்கள்.

அரசாங்கள் மாறுகின்றன கட்சிகள் மாறுகின்றன ஆனால் காட்சிகள் மட்டும் தமிழர்களுக்கு எதிராகவும் அல்லது தமிழ் தேசியத்துக்கு எதிராகவும் தமிழின மக்களுக்கு நியாயம் கொடுக்க முடியாத அரசாங்கமாக இன்று வரைக்கும் இருந்து கொண்டிருக்கிறது . இந்த சம்பவம் மன அழுத்தங்களை மட்டுமல்ல தமிழ் மக்களிடையே அவலத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது .யுத்தத்தால் அழிந்து காயப்பட்டிருக்கின்ற தமிழ் மக்களை மேலும் காயப்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

இது தான் உண்மையாகவும் வரலாற்று தொடர் கதையாகவும் உள்ளது. இன்று மட்டுமல்ல இனியும் இது தான் நடக்கப்போகின்றது. தமிழ் மக்களாகிய நாங்கள் வலி சுமந்து தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தங்களுக்குள் இருக்கின்றோம். எந்த அரசாங்கத்தையும் நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை.

அநுர தோழர்கள் என தமிழ் மக்கள் கூட போனார்கள் அவர்கள் கூட வெட்கப்பட்டு வேதனைபடக் கூடிய நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது இந்த சம்பவம் எனவும் மேலும் கூறினார்.

tru

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும்!

November 18, 2025

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர்

el

தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா, ஈரானை நம்பியுள்ளது ஆப்கான்!

November 18, 2025

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக,

kee

FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !

November 18, 2025

கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025 இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான

ka

இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு

November 18, 2025

இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும்

tee

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு

November 18, 2025

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை

in

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…

November 18, 2025

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார்.

en

ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

November 18, 2025

ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

norw

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!

November 18, 2025

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான

ra

பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி

November 18, 2025

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

med

அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

November 18, 2025

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று

55

இரத்தினபுரி யுவதி மர்மமான முறையில் மரணம்?

November 18, 2025

இரத்தினபுரியில் அஸ்வெசும பணத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பும் போது யுவதி கொலை செய்யபபட்டுள்ளார். பேபி ஷானி என்ற 21 வயதுடைய

passp

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் கடவுச்சீட்டுப் புதுப்பித்தல்

November 18, 2025

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.