மக்களின் கோரிக்கைகளை கவனித்து அவற்றை தீர்வு காண உறுதியளித்ததுடன், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
கனடாவில் வருகை விசாக்கள், கல்வி அனுமதி மற்றும் பணி அனுமதிகளை குடிவரவு அதிகாரிகள் எப்போது இரத்து செய்யலாம் என்பதை தெளிவுபடுத்தும் புதிய விதிகளை கனடா கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்கள் நவம்பர் 4ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாற்றங்கள், விதிகளை மீறுபவர்கள், தகுதியற்றவர்கள் மற்றும் தகவல்களை தவறாக பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஆகியோரின் ஆவணங்களை இரத்து செய்ய குறிப்பிட்ட சட்டப்பூர்வ அதிகாரத்தை குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்குகின்றன.
அதாவது, குற்றவியல் சிக்கல்கள், மருத்துவப் பிரச்சினைகள், காலாவதி திகதியை தாண்டி தங்கியிருத்தல் அல்லது ஒப்புதலின் போது செய்யப்பட்ட பிழைகள் போன்ற காரணங்களுக்காக விசாக்கள் அல்லது அனுமதிகள் இரத்து செய்யப்படலாம்.
மேலும், குறிப்பிட்ட ஒரு நபர், நிரந்தர குடியிருப்பாளராக மாறினால், கடவுச்சீட்டை இழந்தால் அல்லது காலமானால் அவை தானாகவே இரத்து செய்யப்படலாம்.
இது வருகை விசாக்கள், கல்வி அனுமதி மற்றும் பணி அனுமதி உள்ளிட்ட அனைத்து தற்காலிக ஆவணங்களுக்கும் பொருந்தும்.
இந்நிலையில், விசா அமைப்பை மிகவும் வெளிப்படையானதாகவும் நியாயமானதாகவும் மாற்றுவதே தங்களது குறிக்கோள் என குடியுரிமை கனடா தெரிவித்துள்ளது.
முன்னதாக, அதிகாரிகள் விசாக்களை இரத்து செய்ய பொது அதிகாரங்களை பயன்படுத்திய போது, அது குழப்பத்தை ஏற்படுத்தியது.
இப்போது, காரணங்கள் சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டுள்ளன. எனவே விண்ணப்பதாரர்களுக்கு இரத்துக்கான காரணத்தை சரியாக அறிந்துகொள்ள முடியும்.
இது, கனடாவின் குடிவரவு திட்டங்கள் மோசடி நோக்கத்தில் பயன்படுத்தப்படுவதை தடுக்கின்றது.
இந்த புதிய மாற்றத்தால் அதிகமான மக்கள் தங்கள் ஆவணங்களை இழப்பார்கள் என்று அர்த்தமல்ல.
ஆனால், தவறு இழைக்கப்பட்டால் உடனே செயற்படுவதற்கான அதிகாரத்தை இது அதிகாரிகளுக்கு வழங்கும்.
குடியேற்ற நிபந்தனைகளைப் பின்பற்றாதவர்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்தும் அதேவேளையில், நேர்மையான பயணிகள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதே இந்த புதிய விதிகளின் நோக்கமாகும்.