புதிய பயண விதியை அமுல்படுத்தியது பிரித்தானியா!

பிரித்தானியாவுக்கு விசா இன்றி பயணம் செய்யும் வசதி கொண்ட சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 85 நாடுகளைச் சேர்ந்த பயணிகள், இன்று புதன்கிழமை (25) முதல் தங்களது பயணத்திற்கு முன்னதாக இலத்திரனியல் பயண அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இந்த நடைமுறை சில நாடுகளுக்கு மட்டும் அமுலில் இருந்தது. ஆனால் இன்றையதினம் முதல், விசா தேவையில்லாத நாடுகளைச் சேர்ந்த அனைத்துப் பயணிகளும் இதனைப் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த அனுமதியைப் பெறுவதற்கு சுமார் 21.50 அமெரிக்க டொலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

சுற்றுலா, குடும்ப உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள், குறுகிய கால வணிகப் பயணம் மற்றும் 06 மாதங்களுக்கு உட்பட்ட கல்வி கற்கச் செல்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பிரித்தானியாவில் வசிப்பதற்கான உரிமை கொண்டவர்கள் மற்றும் ஏற்கனவே செல்லுபடியாகும் பிரித்தானிய விசா வைத்திருப்பவர்களுக்கு இந்த அனுமதி தேவை இல்லை.

பயணிகள் தங்களது பயணத்திற்கு குறைந்தது 03 நாட்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது ‘UK ETA’ மொபைல் செயலி மூலமாகவோ விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

“எமது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தவும், நவீனமயமாக்கவும் இந்த ETA திட்டம் மிக முக்கியமானது,” என பிரித்தானிய குடிவரவு அமைச்சர் மைக் டெப் தெரிவித்துள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட பிரித்தானியப் பிரஜைகள், தங்களது பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தியே பயணம் செய்ய வேண்டும். வெளிநாட்டுக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தினால் அவர்களுக்கும் ETA அல்லது விசா கட்டாயமாகும்.

gol

தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

March 3, 2026

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, உள்நாட்டிலும் தங்கத்தின் விலையில் ஏற்றம் ஏற்பட்டுள்ளதாக

jail

பெட்ரோல் பதுக்கிய தொழிலதிபர் கைது

March 3, 2026

பெட்ரோல் சேமித்து வைத்திருந்த பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திங்கட்கிழமை (02) அன்று பேருவளை பொலிஸாரால் கைது

mark

13ஆம் திகதி விசாரணைக்கு வருகிறது கனேடிய பிரதமரை சமூக வலைத்தளத்தில் மிரட்டியவர் மீதான வழக்கு

March 3, 2026

வின்னிபெக்கைச் சேர்ந்த ஒரு நபர், பிரதமர் கனேடிய பிரதமர் மார்க் கேர்னிக்கு எதிராக மிரட்டல்கள் வெளியிட்டதாகவும், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு

sol

கனேடிய சோலார் நிறுவனங்களால் கிராமப்புற ஆபிரிக்காவுக்கு மின்சாரம்

March 3, 2026

கனேடிய சோலார் நிறுவனங்கள் புதுமையான தீர்வுகளை பயன்படுத்தி கிராமப்புற ஆபிரிக்காவிற்கு மின்சாரம் கொண்டு வருகின்றன சோலார் சக்தியால் இயங்கும் பேட்டரி

fi

மத்திய மலைநாட்டின் வனப்பகுதிக்கு தீவைப்பு : குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

March 3, 2026

மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.

in wo

சர்வதேச மகளிர் தின ஒத்திவைப்பு வேளை விவாதம்

March 3, 2026

ராளுமன்றம் மார்ச் இன்று முதல் 06ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த

nats

நட்சத்திர ஆமைகளை கடத்த முயன்ற இருவர் கைது

March 3, 2026

சுமார் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான நட்சத்திர ஆமைகள் 25 ஐ, சட்டவிரோதமான முறையில் மலேசியாவிற்கு கடத்த

ev

ஏவுகணைத் துண்டுகள் விழுந்ததில் இலங்கைப் பெண் காயம்

March 3, 2026

இஸ்ரேலின் பீயேர்ஷெபா (Beersheba) குடியிருப்புப் பகுதி மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலின் பாகங்கள் வீட்டின் மீது விழுந்ததில் இலங்கை

har

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

March 3, 2026

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான்

soc

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு?

March 3, 2026

வரவிருக்கும் ஒக்டோபர் மாதம் முதல், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய அரசு

gl

ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

March 3, 2026

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து

tn

இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டல்!

March 3, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது, இலங்கை கடற்படையினர் தமிழக பக்தர்களை தாக்கியுள்ளதாக தமிழகக் கச்சதீவு பாரம்பரிய