பிரித்தானிய,கனேடிய பயணிகளுக்கு சீனா வழங்கும் விசா சலுகை

சீனாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய (UK) மற்றும் கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லா பயணச் சலுகையை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு உறுதிச் செய்துள்ளது.

இந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று(15.02.2026) வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின்படி, சாதாரண கடவுச்சீட்டு வைத்திருக்கும் இவ்விரு நாட்டு குடிமக்களும் வரும் பெப்ரவரி 17ஆம் 2026 முதல் சீனாவிற்குள் விசா இன்றி நுழையலாம்.

சுற்றுலா, வணிகம், உறவினர்களைச் சந்தித்தல் அல்லது போக்குவரத்து (Transit) போன்ற காரணங்களுக்காகச் செல்பவர்கள் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை சீனாவில் தங்குவதற்கு இந்தச் சலுகை அனுமதிக்கிறது.

இந்த விசா இல்லாத கொள்கை முதற்கட்டமாக 2026 டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணங்களின் தொடர்ச்சியாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட சுமார் 50 நாடுகளுக்கு சீனா ஏற்கனவே இந்த சலுகையை வழங்கியிருந்தது.

இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வருவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் சீனாவிற்குப் பயணம் செய்யும் லட்சக்கணக்கான பிரித்தானிய மற்றும் கனேடிய பயணிகள் பயனடைவார்கள்.

விசா விண்ணப்பக் கட்டணம் மற்றும் கைரேகை பதிவு போன்ற நீண்டகால நடைமுறைகள் இனி இவர்களுக்குத் தேவைப்படாது என்பதால், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு