பிரான்சும் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை?

15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கும் சட்டமூலத்தை பிரான்ஸ் பாராளுமன்றம் இன்று (21) இறுதி வாக்கெடுப்பில் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யும் முதல் நாடாக பிரான்ஸ் மாறும்.

பாராளுமன்றத்தின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்கள் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டமூலத்தின் இறுதி வடிவத்திற்கு ஒருமனதாக இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்கெடுப்புக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின்படி, 2026 செப்டம்பர் 1 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் செட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிய கணக்குகளைத் தொடங்க முடியாது.

மேலும், 2027 ஜனவரி முதல், ஏற்கனவே 15 வயதிற்குட்பட்டோரால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக ஊடகக் கணக்குகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதேவேளை, புதிய கல்வியாண்டு தொடங்கும் செப்டம்பர் மாதம் முதல், பிரான்ஸின் உயர்நிலைப் பாடசாலைகளில் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

இருப்பினும், விக்கிப்பீடியா, கல்வி இணையத்தளங்கள் மற்றும் திறந்த மூல மென்பொருள் தளங்கள் இந்தத் தடையிலிருந்து விலக்கு பெறும்.

பிரான்ஸ் பொதுச் சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 90 சதவீதத்தினர் தினமும் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களின் அதிகப்படியான பயன்பாடு மனநலப் பிரச்சினைகள், தற்கொலை எண்ணங்கள் மற்றும் தீய பழக்கவழக்கங்களுக்கான ஆபத்தை அதிகரிப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம், தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் முன்னெடுக்க விரும்பும் முக்கிய சீர்திருத்தங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சிறுவர்களை சமூக ஊடகங்களின் கட்டுப்பாடற்ற உலகிற்குள் அனுமதித்ததன் மூலம் அவர்களின் கவனச் சிதறலை நாம் அதிகரித்துள்ளோம் என அவர் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை விதித்த முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியிருந்த நிலையில், தற்போது பிரான்ஸைத் தொடர்ந்து கிரீஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன.

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது

sa

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!

October 11, 2026

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது

thriuvu

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் முதலாவது கூட்டம்

October 11, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை எதிர்காலத்தில் முறையாக நிர்வகித்து, அதன் செயற்பாடுகளைத் திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள

ind

Toronto இந்தியத் துணைத் தூதரகத்தால் ‘கனடாவில் இந்தியப் பெண்களுக்கு அதிகாரத்தை வழங்குதல்’ கருத்தரங்கு

October 11, 2026

கனடாவில் உள்ள இந்தியப் பெண்களுக்குக் கிடைக்கும் ஆதரவு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பெண்கள், சமூக அமைப்புகள், சட்ட மற்றும்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,