இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ரூ. 1100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்ட திரைப்படமாக வாரணாசி உருவாகி வருகிறது. 2027 ஆம் ஆண்டுதான் வெளியீடு என்பதால் விஎஃப்எக்ஸ் தரம் ஹாலிவுட்டுக்கு சவால்விடும் வகையில் அமையலாம் எனத் தெரிகிறது.
இதில், நடிகர்கள் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் என பல நடிகர்கள் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் வெளியீட்டு நிகழ்வு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய மகேஷ் பாபு, “வாரணாசி திரைப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான கனவு. நிச்சயம் அனைவரையும் பெருமைப்படுத்துவேன். குறிப்பாக, என் இயக்குநர் ராஜமௌலியையும் பெருமையடைச் செய்வேன். வாரணாசி வெளியாகும்போது எங்களை நினைத்து இந்தியாவே பெருமையடையும்” எனத் தெரிவித்துள்ளார்.