நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற சிகௌடிமி (Chicoutimi) இடைத்தேர்தலில் பார்ட்டி கியூபெகோயிஸ் வெற்றி பெற்றுள்ளது. மாகாண பொதுத் தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கும் குறைவான காலம் மட்டுமே உள்ள நிலையில், கட்சி தொடர்ந்து நான்காவது இடைத்தேர்தலில் வெற்றி கண்டுள்ளது.
மேரி-கார்லின் லாஃப்லாம் 45 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார்.கியூபெக்கின் கன்சர்வேடிவ் கட்சி( Conservative Party of Quebec) கட்சியின் கத்தரின் மோரிசெட் 26 சதவீதத்திற்கும் சிறிது மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார். மொத்தம் 142 வாக்குச்சாவடிகளின் முடிவுகள் வெளியான பின்னர் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.
கியூபெக்கில் நம்மை நாமே ஆட்சி செய்வதற்கான முறையை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று இரவு 10 மணிக்கு முன்பு நடந்த PQ கட்சி கூட்டத்தில் லாஃப்லாம் தெரிவித்தார்.
லாஃப்லாம், தனது தொகுதிக்குள் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். இந்த பல்கலைக்கழகம் கியூபெக் நகரத்திலிருந்து வடமேற்கே 200 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்துள்ளது.
சிகௌடிமி (Chicoutimi) தொகுதி, முன்னாள் அமைச்சரான லாஃபோரெஸ்ட் செப்டம்பரில் மாகாண அரசியலை விட்டு விலகி Saguenay நகரின் மேயர் பதவிக்கான தோல்வியடைந்த போட்டியில் ஈடுபட்டதிலிருந்து காலியாக இருந்தது.
மாகாணம் முழுவதும், அக்டோபரில் நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலை முன்னிட்டுபார்ட்டி கியூபெகோயிஸ் கருத்துக்கணிப்புகளில் முன்னிலையில் உள்ளது. கட்சித் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளாமண்டன்(Paul St-Pierre Plamondon) தாம் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2030க்குள் சுயாட்சிக்கான மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.