கோவை:
பாமக இல்லையென்றால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்காது எனத் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமகவின் தயவு:
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பாமக மட்டும் இல்லை என்றால் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது. ஏன், தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் கூட எடப்பாடி பழனிசாமி பாமகவின் தயவு இல்லாமல் ஜெயித்திருக்க முடியாது. அங்கு எங்களது வேட்பாளரைக் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கித்தான் அவர் வென்றார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
திமுகவுடன் கூட்டணி:
மேலும், “திமுகவுடன் கைகோர்த்துக்கொண்டு, முதலமைச்சர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைக்கிறார். தன் மகன் மிதுனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காகவும், அதிமுகவின் சொத்துகளை அபகரிப்பதற்காகவுமே அவர் இவ்வாறு திமுகவின் மறைமுகப் பொதுச்செயலாளராகச் செயல்படுகிறார்” என்று அவர் ஆவேசமாகச் சாடினார்.
கூட்டணி வியூகம்?:
“தற்போதைய அதிமுகவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகள் யாரும் இல்லை” என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சின் மூலம், தவெக – பாமக இடையே கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசியல் மட்டத்தில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
#AadhavArjuna #TVK #AIADMK #PMK #EPS #CMVijay #TNPolitics #BmNews #TamilNews #BreakingNewsTN #TamilNaduNews #LatestNews #TamilNewsLive