பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு 3% வட்டியில் கடன்

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகளை விரைவில் மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான நடைமுறை மூலதனக் கடன்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மூன்று அரச வங்கிகள் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனியார் வங்கிகள் உட்பட மேலும் 13 வங்கிகள் இந்தக் கடன்களை வழங்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அபிவிருத்தி நிதியியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 0% வட்டிக்கு வங்கிகளுக்குப் பணம் வழங்கப்படுவதாகவும், வங்கிகள் மூலம் 3% வட்டி வீதத்தின் கீழ் 25 மில்லியன் ரூபா வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதற்கமைய, 2026 ஆம் ஆண்டிற்காக இதற்காக 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை மீள வலுப்படுத்துவதற்கான கடன் வசதியின் கீழ், 25 மில்லியன் ரூபா வரை 5% வட்டிக்கு அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாகக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

2026 ஆம் ஆண்டில் இதற்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இதனிடையே, விவசாய சமூகத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கும், மொத்த தேசிய உற்பத்தியில் விவசாயத்துறையின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் கடன் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் கீழ் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பரிந்துரையின் பேரில் 50 இலட்சம் ரூபா கடன் வழங்கப்படவுள்ளதாகவும், 2026 ஆம் ஆண்டில் இதற்காக 800 மில்லியன் ரூபா ஒதுப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

saji

10 இலட்சம் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர ஆலோசனை

March 4, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு ஏற்படவுள்ள சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர்

arres

வெற்றிலைக்கேணி பகுதியில் இருவர் கைது

March 4, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மாட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

tr

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் – ட்ரம்ப்

March 4, 2026

“தேவைப்பட்டால், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் நீரிணை வழியாக டேங்கர்களை விரைவில் அழைத்துச் செல்லும்” என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான

kasa'

காசல்ரி நீர்ப்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம்?

March 4, 2026

காசல்ரி நீர்போசன பிரதேசத்தில் நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நீர் மின் உத்தி செய்யும்

20

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி

March 4, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியானது கொல்கத்தாவில் இன்றிரவு 7

iraa

ஈரானில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கை ஒளிபரப்பிய அரச தொலைக்காட்சி!

March 4, 2026

ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளின் இறுதிச்சடங்கு ஈரானிய அரசுத்

vimal

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானின் சட்டத்தரணியே இன்று நாட்டின் நீதி அமைச்சர்

March 4, 2026

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாஷிமின் வழக்கில் முன்னிலையான சட்டத்தரணியே இன்று இந்த நாட்டின்

ku

கூர்மையான ஆயுதத்தால் மனைவியைக் கொலை செய்த கணவன்

March 4, 2026

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற

Pee

மனிதக் கடத்தல்; பீல் பிராந்திய காவல்துறையினரால் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

March 4, 2026

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறையினரால் மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது. கடத்தலில் இருந்து உயிர் தப்பியவர்களுக்கு ஆதரவு,

h

மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை முக்கிய அறிவிப்பு

March 4, 2026

கனடா மிசிசாகாவைச் சேர்ந்த பெண்ணொருவரின் கொலை தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறை கொலை மற்றும் காணாமல் போனோர் பிரிவு

leb

வான்வழித் தாக்குதல்கள் காரணமாக லெபனானிலிருந்து 58,000 பேர் வரை இடம்பெயர்வு

March 4, 2026

லெபனான் முழுவதும் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் மனிதாபிமான நிலைமை பாரிய சரிவைச் சந்தித்துள்ளது.

dro

அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல்

March 4, 2026

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.