பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக இராணுவ மற்றும் விசேட அனர்த்த செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 39,000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய வந்த ஐக்கிய அரபு ராச்சியம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ மற்றும் மீட்பு குழுக்களும், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு C-150 விமானங்களும் தொடர்ந்து நிவாரண சேவைகளை வழங்கி வருகின்றன.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 17,37,330 பேர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதால், நாடு முழுவதும் நிறுவப்பட்ட பாதுகாப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. ஆரம்பத்தில் 1,529 ஆக இருந்த பாதுகாப்பு நிலையங்கள், தற்போது 630 ஆக குறைவடைந்துள்ளதுடன்,

தற்போது சுமார் 63,628 பேர் அங்கு தங்கியுள்ளனர். நேற்று மாலை 4.00 மணி வரை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அனர்த்தம் காரணமாக 638 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 197 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பதுளை செங்கலடி வீதி மற்றும் கம்பளை நாவல்பிட்டி வீதி ஆகியவை மண் சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை, பரந்தன் முல்லைத்தீவு பாலம் உடைந்துள்ளமையால், மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்து ஏ தர வீதிகளும் போக்குவரத்துக்காக முழுமையாகவோ அல்லது பகுதி அளவாகவோ திறக்கப்பட்டுள்ளன.

மத்திய மாகாணத்தில் மின்சார விநியோகம் 95 வீதமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டிருந்த 152 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 141 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை நிலைக்கு திரும்பியுள்ளன. மேலும், நாடு முழுவதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,225 கிணறுகள் மற்றும் 90 பாடசாலைகளை முப்படை வீரர்களினால் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

28

ஒன்டாரியோவில் பணியிடை நீக்கப்பட்ட மருத்துவர் மீது மேலும் 28 பாலியல் முறைகேடு குற்றங்கள்?

March 13, 2026

வடக்கு சஸ்காட்சுவானில் பொது சுகாதார சேவைகளை வழங்கியதுடன் ஒன்டாரியோவில் உளவியல் சிகிச்சை வழங்கியிருந்த பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு மருத்துவருக்கு எதிராக

crime (1)

தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு; இருவர் கைது!

March 13, 2026

மாத்தறை – திக்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுவெல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை (12) இரவு இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நபர்

h

பெண்களுக்கு பாதுகாப்பான, சமமான சமூக சூழலை உருவாக்க வேண்டும் – பெண்கள் அமைப்புக்கள்

March 13, 2026

சூழல் மற்றும் சமூகத்தின் அபிவிருத்தியை வலுவூட்டும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவில் சமூக மட்டத்தில் சேவைகளை வழங்கிவரும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளை

jai

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 586 பேர் கைது!

March 13, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (12) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 586 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்

inte

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை!

March 13, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலங்களைக் குறிவைத்து இணையத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பாரிய நிதி மோசடிகள் மற்றும் தரவுத் திருட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த

death w

பஸ் மோதி பெண் உயிரிழப்பு!

March 13, 2026

தங்கல்லை – ரன்ன வீதியின் நெடொல்பிட்டிய பகுதியில் பஸ் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வியாழக்கிழமை

up

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கௌரவம்!

March 13, 2026

மலையக மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள், மன்றத்தின் தலைவி ஷண்முகப்பிரியா கார்த்திகேசு தலைமையில் கிறேஹெட் தமிழ்

sat

சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

March 13, 2026

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன்,

pan

அரச அலுவலர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

March 13, 2026

அரச அலுவலர்கள் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவர்களது வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு

us

அமெரிக்க விமானம் ஈராக்கில் வீழ்ந்தது

March 13, 2026

மேற்கு ஈராக்கில் ஐக்கிய அமெரிக்க இராணுவத்தில் எரிபொருள் மீள்நிரப்பு விமானமொன்று வியாழக்கிழமை(12) வீழ்ந்துள்ளது. இன்னொரு விமானமும் சம்பந்தப்பட்ட இச்சம்பவமானது தாக்குதலால்

ir

ஈரான் புராதன இடங்கள் சேதம்

March 13, 2026

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28ம் தேதி போர் தொடுத்​தன. இதில் இராணுவ தளங்​கள், ஆயுத

semm

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

March 13, 2026

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி