ஹட்டனில் நகர சபையின் அனுமதியின்றி திறப்பட்ட பல்பொருள் அங்காடி மீது மாலை தாக்குதல் மேற்கொண்ட குற்றத்திற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் நகரில் நேற்று(28) அனுமதியின்றி திறக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை ஆராய்ந்த பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் எதிர்வரும் நகர சபை கூட்டம் வரை கடையை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, மாலை வேளையில், மூடி வைக்கப்பட்டிருந்த கடையின் குளிரூட்டி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் ஹட்டன் கோட்ட கைரேகை அடையாள பிரிவு ஆகியன விசாரணையினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.