பலத்த மழையின் காரணமாக பொகவந்தலாவ, ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவரொன்று இடிந்து விழுந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லை எனவும் அனைவரும் கொழும்பிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டின் இரு படுக்கையறைகள் மற்றும் சமையலறைக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,