பருவகால அடைமழை ஆரம்பித்து இருப்பதால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக வெருகல், ஈச்சிலம்பற்று, மூதூர், சம்பூர், கல்லடி, உப்பூறல், குச்சவெளி, புல்மோட்டை, திருகோணமலை 10 ம் குறிச்சி, சல்லி ஆகிய கரையோர மீனவர்கள் தமது தொழில்களை மேற்கொள்ள முடியாமல் தமது வாழ்க்கையை கொண்டு நடத்துவதில் பல கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தமிழர் சமூக ஜனநாயகக்கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சின்ன மோகன் தனது ஊடக அறிக்கையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இப்பிரதேசத்தை அண்டிய மீனவக்குடும்பங்களுக்கு அரசினால் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களும் தங்களால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் உடன் கவனம் எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.