சிவகார்த்திகேயனை வைத்து பராசக்தி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா. இப்படம் வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ யார் ? என்பது குறித்து தற்போது பார்க்கலாம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தை இயக்கியவர் தான் சுதா கொங்கரா. இப்படம் மூலம் சுதா கொங்கரா மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். என்னதான் பராசக்தி திரைப்படம் நேற்று தான் வெளியாகியிருந்தாலும் இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் முதல் நாள் வசூலையும் வைத்து பார்க்கையில் கண்டிப்பாக இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றே தெரிகின்றது.
இதன் மூலம் சுதா கொங்கரா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கின்றார். இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களின் அசாத்திய வெற்றியை தொடர்ந்து தற்போது அவர் இயக்கியிருக்கும் பராசக்தி திரைப்படமும் வெற்றிப்படமாக அமையப்போகிறது. இந்நிலையில் பராசக்தி படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கப்போகும் அடுத்த படம் எப்படி இருக்கும் ? குறிப்பாக அப்படத்தின் ஹீரோ யார் ? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.