பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன் பலி

பப்ஜி கேமிற்கு அடிமையான இளைஞன், விடிய விடிய விளையாடியதில் அவருக்கு எதிர்பாராத விதமாக இரத்த அழுத்தம் அதிகரித்த நிலையில், மூளையில் இரத்த நாளம் வெடித்துள்ளது. அவருக்கு உடனடியாகத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சைப் பலனில்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேலைக்கு நடுவே சற்று நேரம் கேம் விளையாடுவது கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கும். ஆனால், இந்தக் காலத்தில் சிலர் வீடியோ கேம்களுக்கே அடிமையாகிவிடுகிறார்கள். இரவு முழுவதும் கூட கேம் விளையாடுகிறார்கள். அப்படி விளையாடும்போது அவர்களுக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகளும் கூட ஏற்படுகிறது.

அப்படியொரு சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதில் உயிரிழந்த நபர் கைர்நகரைச் சேர்ந்த முகமது கைஃப் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வீட்டில் பிரபலமான பப்ஜி ஆன்லைன் விளையாட்டை எப்போதும் விளையாடுவாராம். ஹெட்போனை போட்டுக்கொண்டு விடிய விடிய கேம் விளையாடுவதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். இரவு நேரங்களில் இப்படிக் கண்விழித்து விளையாட வேண்டாம் என அவரது வீட்டில் பலரும் அறிவுறுத்திய போதிலும் இவர், அதையெல்லாம் கேட்பதாக இல்லை. தொடர்ந்து இரவு நேரங்களில் கண் விழித்து கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார்.

குறித்த இளைஞன் சம்பவத்தினத்தன்று வழக்கம் போலவே காதுகளில் ஹெட்ஃபோன்களை அணிந்தபடி கைஃப் பப்ஜி கேமை உக்கிரமாக விளையாடிக் கொண்டு இருந்தார்.

அப்போது அவருக்குத் திடீரெனக் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. தனக்குப் பயங்கரமாகத் தலை வலிப்பதாக அவர் சொல்லியுள்ளார். பிறகு ஓரிரு நொடிகளிலேயே அவர் அங்கேயே இருந்தபடியே மயங்கிச் சரிந்து விழுந்துள்ளார். அவரது நிலையைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், எந்தவொரு தாமதமும் இல்லாமல் அவரை உடனடியாக அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

கைஃபின் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்த உள்ளூர் மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக அவரை டெல்லியில் உள்ள சிறப்புத் தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கும் இளைஞனின் தந்தை கூறியதாவது, தனது மகன் கடந்த பத்து ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இதற்காக கைஃப் தனியாகச் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். சிகிச்சையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்துள்ளது. ஆரோக்கியமாகவே காணப்பட்டார். இந்தச் சூழலில் தான் கேம் விளையாடும்போது அவருக்கு இரத்த அழுத்தம் அதிகரித்து அவர் உயிரிழந்துள்ளார். இதுபோல ஒரு சம்பவம் ஏற்படும் என அவரது குடும்பத்தினர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

Arrest_1

ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு பெண்கள் கைது

March 3, 2026

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிவேரிய, எம்பரலுவ வடக்கு பகுதியில் 25

1

சடலமொன்று கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

March 3, 2026

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை – கொழும்பு பழைய வீதியில்

kolla

கையிருப்பில் உள்ள எரிபொருள் அளவு; கொலன்னாவை முனையத்தின் விநியோக நிலைமை

March 3, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக்

sunna

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்தவர் கைது!

March 3, 2026

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி காளிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த நபர் ஒருவர் நேற்று (02)

minn

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

March 3, 2026

ஹபரணை – பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை

Dau

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் மதுபான விற்பனை குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து

March 3, 2026

ஒன்டாரியோ மற்றும் நோவா ஸ்கோஷியா மாகாணங்களில் உள்ள மதுபான உற்பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும்

fra

மார்ச்; மோசடி தடுப்பு மாதம் – நயாகரா பிராந்திய காவல் துறை

March 3, 2026

பல்வேறு வகையான மோசடிகள்/ஏமாற்றுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்து அவற்றை எப்படி மறுப்பது மற்றும் புகாரளிப்பது என்பதை அறிந்து கொள்ளுமாறு பொதுமக்களை

tr

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு மூன்று இலக்குகள் – டிரம்ப்

March 3, 2026

ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல்கள் ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 4 முதல் 5 வாரங்களைக் காட்டிலும் நீண்ட காலம் நீடிக்கலாம் என

g

மயானத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி

March 3, 2026

கட்டானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹாயாவத்தை மயானத்துக்கு அருகிலுள்ள உட்பாதையொன்றில், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், 4

kam

கமேனியின் மனைவியும் உயிரிழப்பு!

March 3, 2026

ரானின் கொல்லப்பட்ட அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மனைவியும் உயிரிழந்ததாக ஈரானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க –

cid

குற்றப்புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட பணிப்புரை

March 3, 2026

உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்

nali

அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

March 3, 2026

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால், தட்டுப்பாடு குறித்துப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என அரசு