படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழ்நாட்டில் பதுக்கிய கஞ்சா பறிமுதல்

இராமநாதபுரம் – தேவிபட்டினம் அடுத்த முள்ளிமுனை கடற்றொழில் துறைமுகத்திலிருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய மதிப்பில் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 150 கிலோ கஞ்சா பொதிகளுடன், மரைன் பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் அண்மை காலமாக தனுஷ்கோடி கடல் வழியாக இராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதியில் இருந்து இலங்கைக்கு,கஞ்சா, கடல் குதிரை, கடல் அட்டை, சமையல் மஞ்சள், மெத்தாம்பேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு தொண்டி அடுத்த முள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக தேவிப்பட்டினம் மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முள்ளிமுனை முக துவார கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மரைன் பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து இருவர் தப்பி சென்ற நிலையில் அந்த பகுதியை சுற்றிவளைத்து மரைன் பொலிஸார் தீவிரமாக தேடினர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக மூட்டையில் பொட்டலங்களில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை தேவிபட்டினம் மரைன் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வந்து எடை போட்டுப் பார்த்தபோது அதில் 150 கிலோ கஞ்சா இருந்தது.

கஞ்சாவை பறிமுதல் செய்த மரைன் பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட முள்ளிமுனை பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் இந்திய மதிப்பு ரூபா 25 இலட்சம் எனவும் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் என மரைன் பொலிஸ் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல்.!

ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையான விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் குருகுல சனசமூக நிலையத்தில் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலைமையில் இன்றையதினம்(14) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தனால் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து கட்சியின் எதிர்கால பயணங்கள் மற்றும் மற்றும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நகர சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர் அணி என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

gam ambu

உயிரியல் பல்வகைமை வலய காணி அனுமதி ரத்து; விதிமுறைகளுக்கான தடை நீடிப்பு!

December 16, 2025

கம்பளை அம்புலுவாவ உயிரியல் பல்வகைமை வலயத்தின் காணி அனுமதியை இரத்துச் செய்யக் கோரும் விதிமுறைகளுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி

Cb rath

பண மோசடி தடுப்புச் சட்டம்; முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு பிணை!

December 16, 2025

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு

ananda wi

நாட்டில் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை?

December 16, 2025

மது பாவனை செய்துவிட்டு வாகனம் செலுத்தும் நபர்களை கண்டுபிடிக்க பயன்படும் மது பரிசோதனை கருவிகளில் பற்றாக்குறை இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு

siddarthan

தமிழக அரசியல் பிரமுகர்களை தமிழ் தேசியத் பேரவையினர் சந்திப்பது நல்ல விடயம் – சித்தார்த்தன்

December 16, 2025

தமிழ் தேசியப் பேரவையினர் இந்த நேரத்தில் தமிழக அரசியல் பிரமுகர்களை சந்திப்பது ஒரு நல்ல விடயம் என தமிழீழ விடுதலை

s

சாரதி உறங்கியதால் அதிவேக வீதியில் விபத்து; சுற்றுலாப் பயணிகள் உட்பட ஐந்து பேர் காயம்!

December 16, 2025

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலெஸ்ஸ – தஹஅமுன பிரதேசத்தில் 168 கிலொமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்

photo-collage.png (19)

இலங்கைக்கும் கசகஸ்தான் குடியரசுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்த நடவடிக்கை

December 16, 2025

இலங்கைக்கான கசகஸ்தான் குடியரசின் தூதுவர் செர்கே விக்டோரோவ் (Sergey Viktorov) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான

in

மற்றுமொரு இந்திய கப்பல் நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்தது

December 16, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நிவாரண பொதிகளுடன் மற்றுமொரு இந்திய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்தியாவால்

amb

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய தேரருக்கு பயணத்தடை

December 16, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடிவிறாந்து

mina

அதி சொகுசு கப்பல் இலங்கையை வந்தடைந்தது!

December 16, 2025

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 135 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட அதி சொகுசு கப்பல் ஒன்று நேற்று திங்கட்கிழமை (15)

Police logo

கொலை வழக்கு: சந்தேகநபருடன் தொடர்பு வைத்திருந்த பொலிஸ் சார்ஜன்ட் இடைநீக்கம்

December 16, 2025

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவில்

government

அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை

December 16, 2025

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க ஊழியர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொது

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து கொடுப்பனவு

December 16, 2025

பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16) முதல் 5,000 ரூபாவிற்கான