பசுபதி நடிக்கும் ‘குற்றம் புரிந்தவன்’ முன்னோட்டம் வெளியீடு

வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து தனக்கென தனித்துவமான அடையாளத்தை கொண்டிருக்கும் நடிகர் பசுபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குற்றம் புரிந்தவன் :தி கில்டி ஒன்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இந்த இணைய தொடர் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது.

இயக்குநர் செல்வமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றம் புரிந்தவன் : தி கில்டி ஒன்’ எனும் இணைய தொடரில் பசுபதி, விதார்த், லட்சுமி பிரியா சந்திர மௌலி மூணாறு ரமேஷ், பிரியதர்ஷினி ராஜ்குமார்,லிஸி அண்டனி, அஜித் கோஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஃபாரூக் ஜெ. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடரை ஹேப்பி யுனிகான் மற்றும் ஆக்புல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” குற்றவுணர்விற்கும் , அப்பாவித்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க கூடிய ஒரு உளவியல் பயணத்தை இந்த இணைய தொடர் பார்வையாளர்களுக்கு வழங்கும்.

கதையின் நாயகன் நல்ல நோக்கத்திற்காக செய்த செயல்கள் அவருக்கே எதிர்பாராத வகையில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் போது மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்பட தொடங்குகின்றன. இது பார்வையாளர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கும்” என்றார்.

ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்த ‘குற்றம் புரிந்தவன் :தி கில்டி ஒன்’ எனும் இணைய தொடர் சோனி லிவ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கதையின் நாயகனான பசுபதியின் உடல் மொழி மற்றும் நடிப்புத் திறனை நுட்பமாக வெளிப்படுத்துவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

cen

திரைப்​படத் தணிக்கை விதிகளில் மாற்​றம்

September 21, 2026

த்​திய தகவல் மற்​றும் ஒளிபரப்பு அமைச்​சகம், மத்​திய திரைப்பட தணிக்கை வாரி​யத்​துக்​கான புதிய திருத்​தப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டுள்​ளது. இந்த வழி​காட்​டு​தல்​களை

11

முதல்வர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

September 21, 2026

நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம், ‘சீதக்​கா​தி’ படங்​களை இயக்​கிய பாலாஜி தரணிதரன், அடுத்து இயக்கி இருக்​கும் படம் ‘பத்​தா’. விஜய்

ra

ராஷ்மிகாவின் ‘மைசா’ டீசர் வெளியீடு

September 21, 2026

ராஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ரவீந்திரா புல்லே இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ்

667dd350-b4d2-11f1-b55d-81b847f392df.png

மொஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்: நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக மேயர் தெரிவிப்பு

September 21, 2026

மொஸ்கோ பிராந்தியத்தை இலக்கு வைத்து உக்ரைன் தனது மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதில் நகரின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு

20867fcd741b7ded3715f325c3c4c5bd17889223173851319_original

“மதுராந்தகத்தில் கொதிக்கும் கிராமங்கள்!” – வாக்கு சேகரிக்கச் சென்ற வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

September 21, 2026

செங்கல்பட்டு: அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) தொகுதியில் அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,

6096cdd0-373b-11f1-b3bd-89f011397f28.jpg

“மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று முதல் சீமான் சூறாவளிப் பிரசாரம்!” – நாம் தமிழர் கட்சியின் 9 நாள் பிரசாரப் பயணத் திட்டம் வெளியீடு

September 21, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நாம்

Screenshot-2026-09-20-165758

“விஜய் லண்டனில் அஜித்தைச் சந்தித்ததில் எந்தத் தவறுமில்லை; தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தேவை!” – நடிகர் பிரகாஷ்ராஜ்

September 21, 2026

சென்னை: தவெக அரசின் செயல்பாடுகள் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து

TVK-Rajmohan-2025-05-439d058ec97e01d8575aae7ecd9ea3c2

“கூட்டணிக் கட்சிகளிடம் திமுக பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது!” – அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி

September 21, 2026

திருநெல்வேலி: திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் தவெக ஆட்சி நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்

New Flights_mweb@2x

“மோசமான வானிலை!” – அமைச்சர் வன்னி அரசு பயணித்த விமானம் மதுரைக்குத் திருப்பல்

September 21, 2026

மதுரை: கோவையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அமைச்சர் வன்னி அரசு உள்பட 165 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம்

images - 2026-09-21T112851.522

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

September 21, 2026

சென்னை: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் அடுத்தடுத்து இரண்டு வெள்ளிப் பதக்கங்களை

dailythanthi_2026-09-20_m222w2xn_karupaaiah

“காலை உணவுத் திட்ட சமையற்கூடப் பணிகளில் ரூ.10.63 லட்சம் மோசடி?” – மதுரையில் தவெக எம்.எல்.ஏ கருப்பையா அதிரடி கள ஆய்வு!

September 21, 2026

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட சமையற்கூட விரிவாக்கப் பணிகளில் போலியான பில்களைத் தயாரித்து

1342768

“இது தவெக ஆட்சியா, திமுக அரசின் நீட்சியா?” – கடலூர் சிப்காட், என்.எல்.சி நிலக்கையகப்படுத்தலுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

September 21, 2026

சென்னை: கடலூர் மாவட்டத்தில் புதிய சிப்காட் (SIPCOT) வளாகம் மற்றும் என்.எல்.சி (NLC) சுரங்க விரிவாக்கத்திற்காக 1,277 ஏக்கருக்கும் அதிகமான