நெடுஞ்சாலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் மீட்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடையில் 140 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பூட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சொகுசு கார் ஒன்றை திஹகொட பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, அபரக்க அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளால் நேற்று (25) இரவு இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அக்காரிலிருந்த பற்றுச்சீட்டின் மூலம், அது தொடாங்கொட நுழைவாயிலூடாக உட்சென்று மத்தல பகுதியை நோக்கி பயணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதன் பதிவு இலக்கத்தைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அதே பதிவு இலக்கத்தில் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவருக்கு கார் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்காரினதுதும் இக்காரினதும் பதிவு இலக்கங்கள் ஒன்றாக இருந்தபோதிலும், இயந்திர இலக்கம் வெவ்வேறானவை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இக்கார் மெரூன் (Maroon) நிறத்திலானது எனவும், இரத்தினபுரியிலுள்ள கார் வெள்ளை நிறத்திலானது எனவும் தகவல் கிடைத்துள்ளது.

கைவிடப்பட்டிருந்த காரை திஹகொட பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர், அதன் கதவுகளைத் திறந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சாரதி ஆசனத்திற்கு அருகிலுள்ள ஆசனத்தில் நாட்குறிப்புப் புத்தகம் ஒன்றும், குருநாகல் பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்ட சான்றிதழ் ஒன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நாட்குறிப்புப் புத்தகத்தினுள் இருந்த அடையாள அட்டையின் நிழற்பிரதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பொத்துஹெர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயரும் முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதுடன், அம்முகவரி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொத்துஹெர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (25) முற்பகல் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளமை அங்கு தெரியவந்துள்ளது.

அதற்கமைய, குறித்த கார் மற்றும் இரத்தினபுரியிலுள்ள கார் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக, அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பி உண்மையான கார் எது என்பதைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

o

யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினம் – ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பு

March 3, 2026

சர்வதேச மகளிர் தினம் யாழ் வீரசிங்கம் கலாசார மண்டபத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படும் என ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான

mano

இந்திய உயர்ஸ்தானிகரிடம் மனோ கணேசன் விரிவான கோரிக்கைகள் முன்வைப்பு!

March 3, 2026

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கு இலகுவான முறையில் கடல் கடந்த இந்தியக் குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்குவது

g

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசருக்கு அழைப்பு

March 3, 2026

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பரிசுத்தப் பாப்பரசர் 14 ஆம் லியோ அவர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

au

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் சுகாதார பொருட்கள் வழங்கல்!

March 3, 2026

அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் அனுசரணையில் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) முன்னாள் பிரதமரின்

xoo

கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி

March 3, 2026

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப்

Poli

தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

March 3, 2026

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த

jud

விளக்கமறியல் கைதிக்கு பிணை வழங்க இலஞ்சம் வாங்கிய நபருக்கும் விளக்கமறியல்

March 3, 2026

சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்குப் பிணை பெற்றுக்கொடுக்க உதவுவதற்காக, அவரது குடும்ப

pera

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் பேராயர் சந்திப்பு

March 3, 2026

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche) பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை

ku

கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

March 3, 2026

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

man

கடன் சேவை வழங்கும் பெண்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு குறித்து கவனயீர்ப்பு

March 3, 2026

நிதி அமைச்சினால் முன்மொழியப்பட்ட நுண் நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைவாக உள்ளூரில் சுய தொழிலில் ஈடுபடும்

shabana

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு வருகின்றவர்களுக்கு புகலிடம் இல்லை!

March 3, 2026

சட்டவிரோதமாகப் பிரித்தானியாவுக்கு சென்றவர்கள் புகலிடம் கோருவோருக்கு இனி நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா

nec

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை – ரஷ்யா

March 3, 2026

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதற்கான எந்தவொரு ஆதாரத்தையும் மாஸ்கோ நிர்வாகம் இதுவரை காணவில்லை என ரஷ்ய வெளியுறவு